இணக்கமான வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகளை, தற்போதைய சமூகம் எதிர்நோக்கி வருகிறது. அவற்றைச் சமாளிப்பதற்கு, புதுப்பிக்கவல்ல எரியாற்றல் தீர்வு வழங்குகிறது. ஆனால் தற்போது உலகளவில் விரைவாக வளரும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் அளவு, குறைவு. உலகின் மொத்த எரியாற்றல் நுகர்வில் 10 முதல் 20 விழுக்காடு வரையான பங்கு மட்டும் அது வகிக்கிறது. அடுத்து புதுப்பிக்கவல்ல எரியாற்றலை எப்படி ஆராய்ந்து பயன்படுத்துவது என்பது, பல்வேறு நாடுகளுக்கும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். புதிய எரியாற்றலில் சீனா செய்த முதலீடு, முன்னணியில் இருக்கிறது என்று அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் துணைத் தலைவர் LiHeJun தெரிவித்தார். அவர் கூறியதாவது
"2012ஆம் ஆண்டு காற்று மின்சாரம், சூரிய வெப்ப ஆற்றல் மின்சாரம், உயிரின ஆற்றல், ஒளி வெப்பம், புவி வெப்பம் முதலியவை உள்ளிட்ட புது எரியாற்றலில், சீனா மொத்தமாக 23 ஆயிரம் கோடி யுவானை முதலீடு செய்துள்ளது. புதிதாக வளரும் பொருளாதாரத் தொழில் துறையை வளர்ப்பது, எரியாற்றல் கட்டமைப்பைச் சரிப்படுத்துவது முதலியவற்றுக்கு புது எரியாற்றல் முக்கிய பங்காற்றுகிறது. எனவே பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் அதன் தலைமை தகுதி மாறாது. பாரம்பரிய எரியாற்றலுக்குப் பதில் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வளர்ந்து வரும்."என்று LiHeJun கூறினார்.
இருப்பினும் விநியோக சமமின்மை, வர்த்தகச் சர்ச்சை, தொழில் துறையில் வரையறை குறைவு முதலிய பிரச்சினைகள், சீனப் புதிய எரியாற்றல் தொழில் துறை வளர்ச்சிப் போக்கில் இருந்து வருகின்றன. சூரிய மின்னாற்றல் துறையைக் கொண்டு எடுத்துக்காட்டாகக் கூறலாம். கடந்த ஆண்டில் சீன சூரிய மின்னாற்றல் உற்பத்தி பொருட்கள் மீது, பெருமளவில் விற்பதற்கு மற்றும் சலுகைக்கு எதிரான வரி வசூலிப்பு புலனாய்வுகளை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுள்ளது. இவ்வாண்டு ஜுன் 6ஆம் நாள் முதல் சீனாவில் உற்பத்தி செய்த படிக சிலிக்கன், மின்கலன் முதலியவற்றுக்கு 11.8விழுக்காடு தற்காலிக வரி வசூலிப்பு மேற்கொள்ள, ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.