• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பழங்களா? பழச்சாறா?
  2014-02-20 19:57:09  cri எழுத்தின் அளவு:  A A A   

பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சுப் பழச்சாறு இளமையுடன் வாழ உதவுகிறது. இதயத்திற்கு இதமான பொருட்களில் ஒன்றாக திராட்சை பழச்சாறு நிலவுகிறது. இவை எல்லாம் நம்மிடம் பொதுவாக நிலவி வருகின்ற நம்பிக்கைகள். பழச்சாற்றில் அதிக சத்துக்கள் உள்ளதில் எள்ளளவும் ஐயமில்லை தான். ஆனால், பழமாக உண்பதா? பழச்சாறாக உண்பதா? என்பதில் தான் குழப்பமே. இதில் எது சிறந்தது என்று பல ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழச்சாறாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு மோசமானதாக அமையும் என்று பிரிட்டனின் கிளாஸ்கோவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பழச்சாற்றில் அதிக சர்க்கரை இருப்பதால், மேசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040