• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பழங்களா? பழச்சாறா?
  2014-02-20 19:57:09  cri எழுத்தின் அளவு:  A A A   

கிளாஸ்கொவ் பல்கலைக்கழக இரத்த குழாய் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசியரியர் நவீத் சாத்தார், மருத்துவர் ஜாசன் கில் ஆகியோர் லான்செட் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியல் இதழில் இந்த புதிய ஆய்வுப் பற்றிய கட்டுரையை எழுதியுள்ளனர். பழச்சாறுகளிலுள்ள ஊட்டசத்து்ககளை தெளிவாக அச்சிட்டு புட்டிகளின் மேல் ஒட்டுவதோடு, ஒரு நாளைக்கு 150 மில்லிக்கு அதிகமாக பழச்சாறு குடிப்பதை தவிர்க்க மக்களை அறிவுறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பழச்சாறு உடலுககு மிகவும் நல்லது என்று எண்ணி பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக பழச்சாறு குடிப்பது மிக மேசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். பழச்சாறு அதிக செறிவுடைய ஆற்றலையும், சர்க்கரையையும் உள்ளடக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக கூறினால், 250 மில்லி ஆப்பிள் பழச்சாற்றில் நூற்றி பத்து கிலோ கலோரிகளும், 26 கிராம் சர்க்கரையையும் உள்ளன. எனவே, அதிக சர்க்கரை அளவு நீரிழிவுக்கு வழிகோலும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040