ஒரு நாளில் ஒருவர் உட்கொள்ளும் கலோரி அளவில் ஐந்து விழுக்காடு மட்டுமே சர்க்கரையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதரா அமைப்பு அண்மையில் தெரிவித்துள்ளது.
ஐந்து விழுக்காடு என்றவுடன் நாம் சாப்பிடுவது ஐந்து விழுக்காடு இருக்கவா போகிறது என்று திருப்பதி அடைய வேண்டாம். இந்த ஐந்து விழுக்காடு என்பது தேனீரில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரையை மட்டுமே குறிப்பதல்ல. உணவிலுள்ள சர்க்கரை, தேன், பழச்சாறுகள், இனிப்புக்கூழ், பழக்குழவை, தேனீரில் சேர்க்கப்படும் சர்க்கரை, நீரிழிவு நோயளிகளுக்கென சிறப்பு இனிப்பு என அனைத்தும் இதில் அடங்குவது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் சேர்த்தால் ஒருநாள் நாம் உட்கொள்ளும் மொத்த கலோரியில் பெரும்பாலும் ஐந்து விழுக்காட்டுக்கு மிகவும் அதிகமாகவே சர்க்கரை அளவு இருக்கும் என்பது குறிப்பிடத்கதக்கது.