• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்க்கரை அளவை குறைக்க உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை
  2014-03-18 16:55:59  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்க்கரை அதிகமான உணவுகளிலும், பானங்களிலும் பொதுவாக குறைவான ஊட்டச்சத்துக்களே உள்ளன. சர்க்கரை அதிகமான உணவையும், பானங்களையும் உணவுநேரங்கள் அல்லாத வேளைகளில் சாப்பிட்டு வந்தால் பற்கள் விரைவில் சொத்தையாக வாய்ப்புள்ளது. மேலும், இயற்கையான பழங்களிலுள்ள சர்க்கரையை விட பழச்சாற்றில் சர்க்கரை மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பழத்தை நேரடியாக சாப்பிடுவது தான் சாலசிறந்தது. சர்க்கரை அதிகரித்தால் நீரிழிவு நோய் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் சிகக்லாக அமைவதோடு, அதுவே, பிற உடலநல சிக்கல்களையும் வரவழைக்கும் என்பது நாமறிந்ததே. இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது மிகவும் ஆபத்தானது. அதிகமான சர்க்கரை சேர்த்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் அண்மையில் அமெரி்க்காவில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்க்கரை நாவிற்கு இனிமை தருகிறது. ஆனால், அதுவே, பல நோய்கள் உருவாவதற்கும் இனிய வழியாகவும் அமைந்து விடும். உட்கொள்ளும் சர்க்கரை அளவை குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040