ஒரு நாளில் உட்கொள்ளும் கலோரியில் பத்து விழுக்காடு சர்க்கரை அளவாக இருக்கலாம் என்ற 2002 ஆம் ஆண்டு வழங்கிய ஆலோசனையை மீளாய்வு செய்து உலக சுகாதார அமைப்பு தற்போது இந்த புதிய ஆலோசனையை வழங்கியுள்ளது.
உலகளவில் அதிகரித்து வரும் உடன்பருமனை ஆய்வுசெய்தபோது, நாள்தோறும் ஒருவர் உட்கொள்ளும் கலோரி அளவில் பத்து விழுக்காடு சர்க்கரை என்பது உடல்நலத்தில் அதிக செல்வாக்கை ஏற்படுத்தவில்லை என்பதால், ஐந்து விழுக்காடு சர்க்கரை அளவு என்ற முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக, நாம் உட்கொள்ளும் சர்க்கரை அளவு தான் உடல் பருமனுக்கும், சொத்தை பல் ஏற்படுவதற்கும் காரணமாகி உடல்நல சிக்கல்களை அதிகரிக்கிறது. அதனால் தான், உலக சுகாதார அமைப்பு முந்தைய ஆலோசனையை மீளாய்வுச் செய்துள்ளது.