• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
'சீனத் தயாரிப்பு' பற்றிய கருத்து கணிப்பு
  2014-09-17 16:55:09  cri எழுத்தின் அளவு:  A A A   

உங்கள் வாழ்க்கையில் 'சீனத் தயாரிப்பு'

சீனா இந்தியா இருநாடுகளிடையே நீண்டகால பொருளாதார மற்றும் பண்பாட்டு பரிமாற்ற வரலாறுடையது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் சீனாவின் உற்பத்திப் பொருட்கள் உள்ளதா? இவற்றுடன் உங்களின் புகைப்படங்களை வெகுவிரைவில் மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்.  இந்நிகழ்வில் பங்கெடுக்கும் நண்பர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவோம்.

இதனிடையே, சீனத் தயாரிப்பு பற்றி உங்கள் அனுபவத்தையும் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?
உங்கள் படங்களுக்கு எத்ரிப்பார்க்கின்றோம்!

தமிழ் பிரிவு (tamil@cri.com.cn)
சீன வானொலி நிலையம்

கீழ் பகுதியில் நேயர் நண்பர்களின் கருத்துக்கள் இடம்பெறுகின்றன

1 ஈரோடு கே. எஸ். மாதேஸ்வரன்

சீனாவின் தலைமை அமைச்சர் இந்தியாவில் பயணம் மேற்கொள்வது ஒரு புதிய பொருளாதாரமாற்றத்தை இந்தியா சீனா இடையே ஏற்ப்படுத்தும் என நான் நம்புகின்றேன்.பண்பாடு கலாச்சார அடிப்படையிலும்,தொழில்ரீதியாகவும்,ஏற்றுமதி இறக்குமதி சார்பாகவும் எல்லைப்பிரச்சினையிலும் நல்ல முன்னேற்றமும்,புதிய வாய்ப்புகளையும் இந்த சந்திப்பு ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.ஏனெனில் இருநாட்டுத் தலைவர்களும் ஒரே கருத்துடையவர்களாகவும்,தொலைநோக்கு சிந்தனையுடனும்,புதிய

பொருளாதாரக்கொள்கை மூலம் இரு நாடுகளின் அமைதி வளம் வளர்ச்சி ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் மேம்பாடு அடைய முடியும் என்று நம்புகிறார்கள்.அதோடு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் சீனாவின் வளர்ச்சி,பொருளாதாரக் கொள்கையின் மேல் அதிக கவனம் செலுத்தி வருவதை அறிவேன்.புதிதாக பதவி ஏற்றவுடன் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து அனைத்து துறைகளிலும் நேரடி கவனம் செலுத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.மேலும் பழைய ஆட்சியில் இருந்த காலதாமதப் போக்கை களைந்து நிர்வாகத்தை சிர் திருத்தம் செய்து வருவது சீனாவின் அரசு கட்டமைப்பை நினைவிற்க்கு கொண்டு வருகிறது.இரு நாடுகளுமே மனிதவளத்தையும் இயற்க்கையும் மூலதனமாக கொண்டவை.இவற்றை சரியான தலைமை நல்ல திசையில் நன்கு

பயன்படுத்தினால் உலகில் மிகச்சிறந்த பெருளாதார நாடுகளாக வரமுடியும் என்று நான் நம்புகின்றேன்.இந்திய சீன அரசாங்க பொருளாதார உறவில் இது புதிய மைல்கல் ஆகும்.சீன தலைமை அமைச்சரின் இந்த இந்தியப்பயணத்தை பெரிதும் ஆவலுடன் இருகரம் கூப்பி நெஞ்சம் நெகிழ வரவேற்கின்றேன்.நன்றிகள்...

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040