tong150116.mp3
|
2014ஆம் ஆண்டு, "ஒன்றுக்கொன்று தொடர்பு" என்ற சொல்லை மக்கள் அடிக்கடி கேட்டிருக்கின்றனர். ஒன்றுக்கொன்று தொடர்பு, சீனா முன்வைத்த பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப்பாதை என்ற தொலைநோக்கு சிந்தனைக்குப் பொருந்தியது. பலதரப்பு மற்றும் இரு தரப்பு தாராள வர்த்தக மண்டலங்கள் நிறுவப்பட்டதுடன், இது, பொது மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது.
அலிபாபாவை மாதிரியாக கொண்ட நாடு கடந்த மின்னணு வணிக அலுவலின் வேகமான வளர்ச்சி, வசதியான போக்குவரத்து, சரக்கு புழக்கம் மற்றும் சுங்கத் துறை நடைமுறை பயனின் உயர்வு ஆகியவற்றிலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அவை, "ஒன்றுக்கொன்று தொடர்பிலிருந்து" நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளன. 2013ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஏபெக் அமைப்பின் தலைவர்களது 21ஆவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில், சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங், பசிபிக் பெருங்கடலின் இரு கரைகளுக்கும் பரவல் செய்யும் ஆசிய-பசிபிக் தொடர்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முன்மொழிவை முன்வைத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றுக்கொன்றான தொடர்பை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற சீனா பாடுபட்டு வருகின்றது. 2014ஆம் ஆண்டு பெய்சிங்கில் நடைபெற்ற ஏபெக் அமைப்பின் தலைவர்களது 22ஆவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில், தற்போது ஆசியாவில் ஒன்றுக்கொன்றான தொடர்பின் முக்கியத்துவத்தை ஷீ ச்சின்பிங் மேலும் விளக்கிக் கூறினார். அவர் கூறியதாவது:
"ஒன்றுக்கொன்று தொடர்பு என்பது ஒரு பாதையாகும், நெடுஞ்சாலை, இருப்புப்பாதை, கப்பல் போக்குவரத்து, இணையம் என ஒன்றுக்கொன்று தொடர்பில் பல்வேறு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்பு என்பது, விதிகள் மிகுந்த பாதையாகும். ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரித்து, விதிகள் மற்றும் தடைகளைக் குறைத்தால், பல்வேறு நாடுகளுக்கிடையே சரக்கு புழக்கம், தங்கு தடையற்றதாக இருக்கும். போக்குவரத்துப் பயன்பாடு மேலும் வசதியாக இருக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பு என்பது, மக்களின் மனங்களை இணைக்கும் பாதையாகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால், மக்களுக்கிடையே பரிமாற்றம் எளிதாக இருக்கும்" என்றார் அவர்.