இந்த ஆக்கப்பணி திட்டத்தின் துவக்கக் காலத்தில் பெற்றுள்ள சாதனையாகவும், மத்திய ஆசிய உயர் வேக இருப்புப்பாதையின் ஒரு பகுதியாகவும், 2014ஆம் ஆண்டு ஜூலை திங்கள், துருக்கி தலைநகர் ஆங்கராவையும், அந்நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லையும் இணைக்கும் உயர் வேக இருப்புப்பாதையின் இரண்டாவது கட்ட கட்டுமானத்தை நிறைவேற்றியது. சீனாவின் உயர் வேக இருப்புப்பாதை கட்டுமான திட்டப்பணி, வெளிநாடுகளில் நுழைவதில் முன்னேற்றமடைந்துள்ளது.
பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப்பாதை ஆக்கப்பணி தொலைநோக்கு திட்டத்தின் முன்னேற்றத்துடன், மேலதிக இரு தரப்பு மற்றும் பல தரப்பு தாராள வர்த்தக மண்டலங்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளி விபரங்களின்படி, இது வரை, 32 நாடுகள் மற்றும் பிரதேசங்களை அடக்கிய 20 தாராள வர்த்தக மண்டலங்களைச் சீனா கட்டியமைத்து கொண்டிருக்கிறது. 12 தாராள வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்கியுள்ளது. 6 உடன்படிக்கைகளைப் பற்றி கலந்தாய்வு நடத்தி வருகிறது. சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலம், சீன-சிங்கப்பூர் தாராள வர்த்தக மண்டலம், சீன-பாகிஸ்தான் தாராள வர்த்தக மண்டலம், விரைவில் கட்டிமுடிக்கப்படும் சீன-தென் கொரிய தாராள வர்த்தக மண்டலம் ஆகியவை, பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதையில் அமைந்துள்ளன. பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதையும், தாராள வர்த்தக மண்டலங்களின் கட்டுமானமும் ஒன்றிடம் இல்லாததை மற்றது நிறைவு செய்கின்றன என்றும், அவை ஒன்றுக்கொன்று தொடர்பை முன்னேற்றும் முக்கிய வடிவங்களாக இருக்கின்றன என்றும் சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு உறவு கல்லூரியின் பேராசிரியர் வாங் யீ வெய் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப்பாதையில், போக்குவரத்து, முதலீடு, நாணயம், கொள்கை, மக்களின் மனங்கள் ஆகியவற்றுக்கிடையேயான இணைப்பு அதிகமாக இருக்கின்றது. தாராள வர்த்தக மண்டலங்கள், சுங்க வரியைக் குறைத்து, விலக்குவதன் மூலமும், முதலீட்டின் வசதிமயமாக்கத்தை விரைவுபடுத்துவதன் மூலமும், வர்த்தகம் மற்றும் நிதியின் புழக்கத்தை விரைவுபடுத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதியைத் தூண்டுகின்றன. இவை புதிய ரக உலகமயமாக்கத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் முக்கிய வடிவமாகும். சீனாவும் ஐரோப்பாவும், பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப்பாதையின் துவக்க புள்ளியாகவும், இறுதி புள்ளியாகவும் இருக்கின்றன. எதிர்காலத்தில், சீன-ஐரோப்பிய தாராள வர்த்தக மண்டலம் நிறுவப்படக்கூடும்" என்றார் அவர்.