சீனா ஆக்கப்பூர்வமாக ஆதரிக்கும் "ஒன்றுக்கொன்று தொடர்பு" என்ற கட்டமைப்பில், அடிப்படை வசதிகளின் கட்டுமானம், மக்களின் நாடு கடந்த இடம்பெயர்வு, விதிகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல துறைகள் இடம்பெறுகின்றன. மக்களின் நாடு கடந்த இடம்பெயர்வை எடுத்துக்காட்டாக, இது வரை, சீனா, சுமார் 90 நாடுகளுடன் விசா நீக்க உடன்படிக்கைகளை உருவாக்கியுள்ளது.
உலகளவில் ஒன்றுக்கொன்று தொடர்புக்கு மேலும் வலுவான ஆற்றலை வழங்கும் வகையில், பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21வது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப்பாதை ஆக்கப்பணி பற்றிய நெடுநோக்கு திட்டத்தை சீனா 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதன்முறையாக முன்வைத்தது. இதில், பட்டுப்பாதை பொருளாதார மண்டலம், சீனாவிலிருந்து ஐரோப்பிய ஆசிய கண்டத்தின் மையப் பகுதி மற்றும் மேற்கு பகுதிக்கு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். 21ஆவது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப்பாதை, சீனாவிலிருந்து, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்து மாக்கடலுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும். தற்போது, அடிப்படை வசதி கட்டுமானத்தை முதன்மையாக கொண்டு பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதை ஆக்கப்பணி படிப்படியாக முன்னேறி வருகின்றது. இது வரை, சீனா குறைந்தது 20 நாடுகளுடன் உயர் வேக இருப்புப்பாதை துறையில் ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளது, அதோடு பல நாடுகளுடன் இது பற்றிய கலந்தாய்வுகளையும் நடத்தியிருக்கின்றது.