• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துங்டேன் இடபெயரும் பறவைப் பாதுகாப்பு மண்டலம்
  2016-01-15 09:20:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காயின் மையப்பகுதியை விட, சுற்றபுப்புறத்தில் ஒரு சுதந்திரமான இயற்கையான சூழல் இருக்கும். அதனாலே, ஷாங்காய்க்கு வந்தால், சுற்றுப்புறத்துக்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். ஜிபௌ சிறுநகர் ஷாங்காயின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழைய சிறுநகராமாகும். ஹான் வம்ச காலத்திலே இச்சிறுநகர் உருவாக்கப்பட்டது. மின் மற்றும ஜிங் வம்ச காலத்திலே இந்நகர் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. வடக்கு மற்றும் தெற்கிலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சாலைகள் உள்ளன. ஏரியின் மேலே பாரம்பரிய பாலம் உள்ளது. பழைய கோயில், மதுக் கடை, அடைமானக் கடை முதலியவற்றையும் நீங்கள் பார்வையிடலாம். வணிகத்தின் செல்வாக்கில், இன்று ஜிபௌ சிறுநகரில் நிறைய நவீன வசதிகள் தோன்றியுள்ளன. ஷாங்காய் மாநகரிலிருந்து மிகவும் நெருங்கிய பழைய சிறுநகர் அதுவாகும். தினசரி பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் இங்கு வந்து தங்களது சிறப்பான காலத்தைக் கழிப்பது வழக்கம். நீங்கள் 9இலக்க சுரங்கத் தொடர்வண்டி மூலம் சிறுநகர் நேரடியாக சென்றடையலாம்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040