• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துங்டேன் இடபெயரும் பறவைப் பாதுகாப்பு மண்டலம்
  2016-01-15 09:20:34  cri எழுத்தின் அளவு:  A A A   

இதையடுத்து, சுமார் 1500 ஆண்டு வரலாறுடைய பழைய சிறுநகரை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதன் பெயர் நேன்சியாங் எனும் சிறுநகராகும். மின் மற்றும் ஜின் வம்ச காலத்திலே இச்சிறுநகரில் 20க்கும் மேலான வனப்பூங்காக்கள் உருவாக்கப்பட்டது. வரலாற்று சிறப்பு வாய்ந்த காட்சித்தலங்கள் பல அங்கு பார்வையிடத்தக்கவை. ஷாங்காய் மக்களின் சிறப்புத் தோட்டம் என நேன்சியாங் சிறுநகர் மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டு வருகிறது. 11இலக்க சுரங்கத் தொடர்வண்டி மூலம் அந்நகரை எளிதில் சென்றடையலாம். அதன் படங்களை முதலில் பார்க்க விரும்பினால், சீன வானொலி தமிழ் பிரிவின் இணையத்தில் உலா வாருங்கள்.

சரி நண்பர்களே, இதுவரை, ஷாங்காய் மைய நகரின் சுற்றுப்புறத்திலுள்ள சில காட்சித்தலங்கள் பற்றி அறிந்து கொண்டோம். இத்துடன் இன்றைய சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. எப்படி, பிடித்திருந்ததா?நிகழ்ச்சி பற்றி ஏதேனும் கருத்துக்கள் அல்லது முன்மொழிவுகள் இருந்தால், எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் பதிலை நான் எப்போதும் எதிர்பார்க்கிறேன். அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040