• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் வட்டரங்கு வித்தை நகர்
  2016-02-04 09:57:52  cri எழுத்தின் அளவு:  A A A   

அடுத்து, பூக்களைப் பார்க்க விரும்பும் நண்பர்களுக்கு ஒரு சிறப்பான காட்சித்தலத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நேன்ஹூவேய் குழிப்பேரி பூ கிராமம் அதுவாகும். ஷாங்காய் மாநகரின் பூதூங் பிரதேசத்திலுள்ள ஹூவேநேன் வட்டத்தில் இந்தக் குழிப்பேரி பூ கிராமம் அமைந்துள்ளது. நான்கு ஆண்டுகளின் கட்டுமானத்துக்குப் பிறகு, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கான சிறந்த பூங்காவாக அது மாறியுள்ளது. அங்கு, சுமார் 33 ஹெக்டர் நிலப்பரப்புடைய குழிப்பேரி வயல் உள்ளது. அதனாலே, ஷாங்காய் குழிப்பேரிப் பூ விழாவின் முக்கிய காட்சித்தலமாகவும் நேன்ஹூவேய் குழிப்பேரி பூ கிராமம் விளங்குகிறது. ஷாங்காயின் மையப்பகுதியிலிருந்து சுமார் 48கிலோமீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. குழிப்பேரிப் பூக்களைக் கண்டுரசிக்க, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வருவர். ஒவ்வொரு ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் திங்களில், குழிப்பேரிப் பூ விழா நடைபெறுவது வழக்கம். பூக்களை விரும்பும் நண்பர்கள் தவறவிடக் கூடாது. குழிப்பேரிப் பூ கடலில் மூழ்கியதைப் போல அனுபவிக்கலாம்.

மேலும், குழிப்பேரி மரத்துக்குப் பராமரிப்புத் திட்டம் 1999ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பத்து ஆண்டுகாலத்தில், நீங்கள் பராமரிக்கும் குழிப்பேரி மரத்துக்கு உரமிடலாம். பக்குவமடைந்த குழிப்பேரி பழத்தைப் பறிக்கலாம். எப்படி, ஆர்வம் தோன்றியுள்ளதாக?நேன்ஹூவேன் குழிப்பேரி பூ கிராமத்தின் நுழைவுச்சீட்டு 48யுவானாகும். காலை 8முதல் மாலை 5மணி வரை இக்கிராமம் திறக்கப்பட்டிருக்கும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040