• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் வட்டரங்கு வித்தை நகர்
  2016-02-04 09:57:52  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்றைய நிகழ்ச்சியின் கடைசியில், குழந்தைக்கு மிகவும் பிடிக்கும் ஷாங்காய் வட்டரங்கு வித்தை நகர் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்நகர் ஷாங்காயின் ஜிங்யன் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அதற்குச் சிறப்பு மிக்க உருவம் இருக்கும். அதன் கூரை ஒரு வளைவிலான தங்கப் பந்து போல இருக்கும். இந்த வட்டரங்கு வித்தை நகருக்கு ஐந்து முக்கிய பகுதிகள் இருக்கும். அதாவது, வட்டரங்கு, விலங்கு அரங்கேற்ற அரங்கு, பொழுதுபோக்கு மையம், அரங்கேற்றத்துக்கான பயிற்சி அரங்கு மற்றும் வரவேற்பு மையம் ஆகியவைவாகும். ஷாங்காய் வட்டரங்கு வித்தை நகரின் அரங்கேற்றங்கள் முக்கியமாக ஷாங்காய் வட்டரங்களில் நடைபெறும். பல்வகை வேடிக்கையான நிகழ்ச்சிகளை அங்கு கண்டுரசிக்கலாம். சீனாவில் மட்டுமல்ல, ஷாங்காய் வட்டரங்கு உலகிலேயே மிகவும் புகழ் பெற்றது. மேலும், வட்டரங்கு தவிரவும், மேஜிக் நிகழ்ச்சிகளையும் பார்வையிடலாம். கடந்த சில ஆண்டுகளில், ஷாங்காய் சர்வதேச மேஜிக் விழா மற்றும் சர்வதேச மேஜிக் போட்டியும் ஷாங்காய் வட்டரங்கு நகரில் நடைபெறுவது வழக்கம். குழந்தையுடன் பயணம் மேற்கொண்டால், ஷாங்காய் வட்டரங்கு நகரைத் தவறவிடக் கூடாது. 1இலக்க சுரங்கத் தொடர்வண்டி மூலம் இங்கு நேர சென்றடையலாம்.

சரி நண்பர்களே, இதுவரை, ஷாங்காய் மாநகரின் சுற்றுப்புறத்திலுள்ள சில காட்சித்தலங்கள் பற்றி அறிந்து கொண்டோம். இத்துடன் இன்றைய சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. எப்படி, பிடித்திருந்ததா?நிகழ்ச்சி பற்றி ஏதேனும் கருத்துக்கள் அல்லது முன்மொழிவுகள் இருந்தால், எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் பதிலை நான் எப்போதும் எதிர்பார்க்கிறேன். அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040