• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய மாணவர்களின் தாலிப் பயணம்
  2016-10-20 09:27:44  cri எழுத்தின் அளவு:  A A A   

சந்திர நாட்காட்டியின் நான்காவது மாதம் 23 மற்றும் 24ஆம் நாள், பை இனத்தவர்கள் ரோஸாங்லின் எனும் மத நிகழ்ச்சியை நடத்துவர். அப்போது, அவர்கள் உள்ளூரின் மூன்று முக்கியமான கோயில்களுக்குச் சென்று வணங்குவர். நாளடைவில், இச்செயல்பாடு, தேசிய இனப் பண்பாட்டு அரங்கேற்ற நிகழ்ச்சி மற்றும் பொருட்காட்சியை ஒன்றிணைந்து ஒரு பெரிய கொண்டாட்ட நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

மதச் செயல்பாட்டைப் பார்வையிட்டு, அவர்கள் ஒரு சாய ஆலைக்கு வந்தனர். துவான் என்பவர் இவ்வாலையின் உரிமையாளராவார். அவர் இந்த சாய ஆலையின் 18ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர்.

உற்சாகமான அவர் இந்தியாவிலிருந்து வந்த அஷ்வானி அவர்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அஷ்வானி அவர்களுக்குச் சாய நுட்பத்தைக் கற்பித்தார். சாய நுட்பம் பற்றி அவர்களுக்கு விபரமாகக் கூறினார்.

ஒரு வகை தாவரத்தை நிறமியாக்கிய பழைய நுட்பம் சாயம் ஆகும். அஷ்வானி அவர்கள் ஒவ்வொருவரும் இந்நுட்பத்தைச் செயல்படுத்தினர். தமது படைப்பைப் பெருமையுடன் விளக்கிக் கூறினர்.

என்னுடையது நான்கு இலைகளைக் கொண்ட தாவரம், அது மங்கலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்.

என்னுடையது மேப்பிள் இலையாகும். அது அறுவடையைப் பிரதிநிதித்துவப்படுத்தும்.

என்னுடையது பட்டாம்பூச்சி. காதலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று அவர்கள் முறையே கூறினர்.

பயணத்தின் போது, ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு கவிதையைப் போல உள்ளது. மனத்தின் மூலம் உணர வேண்டும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040