• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போத்தலா மாளிகை
  2016-10-28 14:55:05  cri எழுத்தின் அளவு:  A A A   

போத்தலா மாளிகை என்று கூறினால், அதன் வரலாற்று ஊற்றுக்கண்ணை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். சுங்ஸேன்கான்பூ திபெத்தை ஒருமைப்படுத்தி மன்னராக மாறினார். அப்போதைய தாங் வம்சகால ஆட்சியுடன் நல்லுறவை வளர்க்க, அவர் தாங் வம்சகாலத்தின் இளவரசி வேன்சேங்கைத் திருமணம் செய்தார். இளவரசியை வரவேற்க, ஆயிரக்கணக்கான வீடுகளைக் கொண்ட சிறப்பான மாளிகையைக் கட்டியமைக்க, அவர் கட்டளையிட்டார். அது தான், போத்தலா மாளிகையாகும். வரலாற்றுப் பதிவின்படி, சுங்ஸேன்கான்பூ மற்றும் வேன்சேன் இளவரசியின் மாளிகைகள், வெள்ளி மற்றும் வெண்கலத்தாலிலான பாலத்தால் ஒன்றிணைக்கப்பட்டவை.

மலையடியிலுள்ள நுழைவாயிலிருந்து சுமார் 900க்கும் மேலான கற்களிலான படிகட்டுகள் உள்ளன. போத்தலாவின் மொத்த கட்டிடப் பரப்பளவு சுமார் 130000 சதுர மீட்டராகும். அரண்மனை, கோட்டை மற்றும் கோயிலை ஒன்றிணைந்துள்ள கட்டிடத் தொகுதி போத்தலா மாளிகையாகும். சிவப்பு மாளிகை மற்றும் வெள்ளை மாளிகை போத்தலாவின் இரண்டு முக்கிய பகுதிகளாகும். வெள்ளை மாளிகை, ஒவ்வொரு தலைமுறை தலாய்லாமாவின் வாழ்விடமாகும். அங்குள்ள அலங்காரம் தலைசிறந்தது மிக்கது. சுவரில் பௌத்த மதம் பற்றிய அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சிவப்பு மாளிகையில், புத்தரின் சிலைகளும், சுங்ஸேன்கான்பூ மற்றும் வேன்சேங் இளவரசியின் உருவச்சிலைகளும் உயிர்த்துடிப்புடன் நிற்கின்றன. வண்ணமயமான சுவர் ஓவியங்கள், தங்கம் மற்றும் மணிகளால் இம்மாளிகை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் ஒழுங்கான கட்டமைப்பு முறை மூலம், திபெத் கட்டிடக் கலை முழுமையாக வெளிக்கொணரப்பட்டுள்ளது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040