• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடவுள் வசிக்கும் இடம்
  2017-01-04 11:20:48  cri எழுத்தின் அளவு:  A A A   

முதலில், லூலாங் காட்சித்தலத்திலுள்ள அழகு மிக்க காட்சி பற்றி கூறுகிறேன். அதாவது, அங்குள்ள காடுகளின் கடல். செழிந்து வளரும் தளிர், தேவதாரு முதலிய மரங்களால், பச்சை பசேல் என இருக்கும் காடுகளின் கடல் உருவாகியுள்ளது. குறிப்பாக, தொலைவில் Namjagbrawa மலையிலுள்ள வெள்ளை பனியுடனான பிரதிபலிப்பில், இந்த காடுகளின் கடல் மேலும் அழகாகத் தோன்றும். மேலும், எண்ணற்ற பூக்கள் புவ்வெளியில் மலர்ந்து வருகின்றன. சுற்றுலா வளர்ச்சி மூலம், உள்ளூர் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானம் உயர்ந்துள்ளது. அதனால், மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக, மரங்களைப் பயிரிட்டு அவர்கள் உயிரின சுற்றுச்சூழலை முழு மூச்சுடன் பேணிக்காத்து வருகின்றனர். வண்ணமயமான பூக்கள், தொலைவிலுள்ள பனிமலை, பச்சை பசேல் என இருக்கும் காடு, பறந்து திரியும் வெள்ளை மேகங்கள் முதலியவற்றால், எதனுடனும் ஒப்பிட முடியாத அழகு அங்கு உருவாகியுள்ளது.

லூலாங் காட்சித்தலத்தின் நுழைவுச்சீட்டு 90 யுவானாகும். காலை 7 மணி முதல் மாலை 18 மணி வரை, இக்காட்சித்தலம் பயணிகளுக்குத் திறக்கப்படுகிறது.

லூலாங்க்குக்குச் சென்றால், சேஜிலா தேசியக் காட்டுப் பூங்காவைப் பார்வையிடத் தவறாவிடக் கூடாது. அங்குள்ள காடுகளின் பரவல் விகிதம் சுமார் 55விழுக்காட்டுக்கு மேலாகும். தாவரங்களின் அருங்காட்சியகம் என மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. சீனாவில், மேகங்கள், காடுகள், பூக்கள் ஆகியவற்றைக் கண்டுரசிக்கும் தலைசிறந்த பத்து மலைகளில், சேஜிலா மலை ஒன்றாகும்.

பரந்து பட்ட azaleas பூக்களால், சேஜிலா மலை புகழ் பெற்றுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டின் மே முதல் ஜூலை திங்கள் வரை, கடல் மட்டத்திலிருந்து 2900 முதல் 5200 மீட்டர் உயரம் வரையிலான மலைப் பகுதியில், azaleas பூக்கள் மலர்ந்திருக்கும். அப்போது, சேஜிலா ejila மலை, பூக்களின் கடலாக மாறும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040