• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வானம் மற்றும் கடலின் விளிம்புக்கு வா!
  2017-02-09 16:02:45  cri எழுத்தின் அளவு:  A A A   

நண்பர்களே, ஹைநான், பட்டாம்பூச்சியின் நாடு என வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. உலகிலுள்ள 650 வகை பட்டாம்பூச்சிகளில், 50 விழுக்காட்டு பட்டாம்பூச்சிகளை ஹைநானில் கண்டுரசிக்கலாம். யா லோங் வேன் சுற்றுலா காட்சித்தலத்தில் பட்டாம்பூச்சி பூங்கா ஒன்று உள்ளது. அது, சீனாவில் மிகப் பெரியதாகும். பட்டாம்பூச்சி மற்றும் மழைக்காட்டுப் பண்பாடு இப்பூங்காவின் தலைப்பாகும். இந்தப் பூங்கா சுமார் 1.5 ஹெக்டர் நிலப்பரப்புடையது. பூங்காவில் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் வளர்கின்றன. எங்கும் வண்ணமயமான பட்டாம்பூச்சிகள் பறந்து திரிவதைக் கண்டுரசிக்கலாம்.

அரிய மரங்களும், ஆண்டு முழுவதும் மலரும் பூக்களும், பாய்ந்தோடும் நதிகளும் பூங்காவில் காட்சியளிக்கும்.

அதுமட்டுமல்ல, பட்டாம்பூச்சி உருவமுடைய காட்சியகத்தில், உலகில் புகழ் பெற்ற பட்டாம்பூச்சிகளைக் கண்டுரசிக்கலாம். இயற்கைத் தாயின் அதிசயத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பட்டாம்பூச்சிப் பூங்காவின் நுழைவுச்சீட்டு 26 யுவானாகும்.

வண்ணமயமான பட்டாம்பூச்சி காட்சியகம் தவிரவும், யா லோங் வேன் சுற்றுலா காட்சித்தலத்தில் சிப்பி காட்சியகமும் உண்டு. வெவ்வேறான சிப்பிகளையும் கண்டுரசிக்கலாம்.

எப்படி நண்பர்களே, இதமான சூரியன் ஒளி, தூய்மையான காற்று, நீல வண்ணமயமான கடல் நீருடைய யா லோங் வேன் சுற்றுலா காட்சித்தலத்தைக் காண விரும்புகிறீர்களா.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• போ ஆவ் ஆசிய மன்றக்கூட்டம் துவங்கியது
• அமெரிக்காவில் புதிய மருத்துவக் காப்புறுதித் திட்டம் தோல்வி
• வட கொரியா:அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் பற்றிய கூட்டத்தில் பங்கேற்காது
• போஆவ் ஆசிய மன்றத்துக்கு ஷி ச்சின்பீங்கின் வாழ்த்துரை
• லீ கெச்சியாங்கும் மால்கல்ம் டர்ன்புலும் தொழில் மற்றும் வணிகத்துறை வட்ட மேசை கூட்டத்தில் பங்கேற்பு
• பண்பாட்டு மரபு செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும்
• சீன, ஆஸ்திரேஸிய தலைமையமைச்சர்களின் ஆண்டு சந்திப்பு
• ஆசிய வட்டார ஒத்துழைப்பு பற்றி சாங் கெள லீயின் கருத்து
• லிபிய கடற்கரைக்கு அருகில் கப்பல் கவிழ்ந்து விபத்து
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040