கடந்த ஆண்டின் வட்ட மேசைக் கூட்டத்தில், 8 நாடுகளை ச் சேர்ந்த 13 செய்தி ஊடங்கள் மற்றும் அமைப்புகள், ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கும் கருத்தை எட்டியுள்ளன. இவ்வாண்டு, இந்த பொதுக் கருத்து மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. 23ஆம் நாள் நடைபெற்ற இக்கூட்டத்தில், கூட்டத்தின் தலைவரும் சீன வானொலி நிலையத்தின் இயக்குநருமான வாங்கேங்நியான் பேசுகையில்
சர்வதேச பரவல் ஆற்றலையும் கூற்று உரிமையும் பயனுள்ள முறையில் உயர்த்துவது, ஆசிய செய்தி ஊடகங்களின் பொதுக் கருத்தாகும். ஒருமைப்பாட்டு ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பைக் கூட்டாக உருவாக்குவது, ஆசிய நேயர்களின் பொது விருப்பமாகும். நாகரிகத்தைக் கடந்த பரப்பு ஆக்கப்பூர்வமாக மேற்கொள்வது, மக்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் பயனுள்ள முறையாகும். வெகுவிரைவில், செய்தி ஊடகம், அரசு, தொழில் நிறுவனம் ஆகியவற்றை ஒருமைப்படுத்தும் பிரதேசம் கடந்த, பயனுள்ள முறையில் செய்திகளை பரப்பும் சிறப்பான ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்படும். ஆசிய செய்தி ஊடகங்களின் ஒட்டுமொத்த பரப்பு ஆற்றலையும் சர்வதேச செல்வாக்கு ஆற்றலையும் உயர்த்துவதற்கும், ஆசியா, தலைவிதிப் பொது சமூகமாக மாறி, ஆசிய மக்களின் பொது நலன்களைப் பெறுவதற்கும் இது பங்காற்றும் என்று வாங்கேங்நியான் கூறினார்.