• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

குவெய்ச்சோ மாநிலத்திலுள்ள ஹோச்சான் கல்லறை

பழைய சீன மொழியில்"யென்லான் ச்சு த்தா"என்பது 2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்த யெலான் நாட்டில் பரவிய கதையாகும். யென்லான் நாடு குவெய்ச்சோ மாநிலத்தின் பீடபூமியில் நூறு ஆண்டுகளாக வளமடைந்த ஒரு நாடு. பின்னர் நட்சத்திரம் போல காணாமல் போயிற்று. கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சீன தொல் பொருள் ஆராய்சியாளர்கள் குவெய்ச்சோ மாநிலத்தில் ஹெச்சான் இடத்தில் அப்போதைய கல்லறைகளை கண்டுபிடித்த பின் யென்லான் நாட்டின் அற்புத மூடியைத் திறந்தனர்.

2001ம் ஆண்டு செப்டெம்பர் திங்களில் சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள குவெய்ச்சோ மாநிலத்தின் ஹெச்சான் மாவட்டத்தின் கெலோ வட்டத்தில் பண்டைய யென்லான் காலத்தைச் சேர்ந்த 108 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் புதைக்கப்பட்ட பொருட்கள் மிகவும் செழுமையானவை. பண்டைகால யென்லான் பண்பாடு, வரலாறு ஆகியவற்றை ஆராய்வதற்கு இந்த பொருட்கள் முக்கியத்துவம் வாய்ந்தன. இந்த தொல் பொருள் ஆராய்ச்சி 2001ம் ஆண்டின் "சீனாவின் பத்து தொல் பொருள் கண்டுபிடிப்புகளில்"ஒன்றாக சேர்க்கப்பட்டது. யெலான் நாடு அப்போது மிக வலுவான சிறுபான்மை தேசிய இன ஆட்சியாக இருந்தது. கி.மு.3வது நூற்றாண்டு முதல் கி.பி நூறு ஆண்டு வரையிலான 200 ஆண்டுகளில் இந்த இனம் செல்வாக்கு பெற்றிருந்தது. கி.மு 2வது நூற்றாண்டில் சீ ஹென் காலத்தில் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் ஸமாசியென் சீ ஹென் தூதருடன் இணைந்து சீனாவின் தென் மேற்கு பகுதியிலுள்ள பல்வேறு சிறுபான்மை தேசிய இனங்களின் ஆட்சிகளை பார்வையிட்ட பின் எழுதிய "வரலாற்று நூலில்"தென்மேற்கு பகுதியிலுள்ள சிறுபான்மை தேசிய இனங்களில் யெலான் இனத்தின் செல்வாக்கு மிக வலிமையானது. அதற்கு ஒரு லட்சம் படைவீரர்கள் இருந்தன. அங்குள்ள ஏரிகளில் கப்பல்கள் வந்து போயின. செழுமையான காட்சி காணப்பட்டது என்று குறிப்படப்பட்டுள்ளார். யெலான் மன்னர் சீஹென் தூதரைச் சந்தித்து பேசிய போது "உங்கள் ஹென் ஆட்சி வலிமையதா? அல்லது எங்கள் யெலான் ஆட்சி வலிமையானதா?"என்று கேட்டார். அப்போது ஹென் இனம் சீனாவின் பெரும் பகுதிகளை ஆட்சிபுரிந்தது. யெலான் தொலைதூர மலைப் பிரதேசத்தில் இருந்தது. அதற்கும் ஹென் ஆட்சிக்குமிடையில் ஆற்றலில் எவ்வளவு வித்தியாசம் இருப்பது அவருக்கு தெரியாது ஆகவே துவத்தில் நாம் குறிட்ட "யென்லான் ச்சு த்தா"என்னும் சீன பழைய மொழி உருவாயிற்று. இந்த கேலி மொழி தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது. இப்போது யெலான் என்ற பண்டைய நாடு இருந்ததற்கு சாட்சியமாக இந்த பழைய மொழி பயன்படுத்தப்படுகின்றது.

ஹெச்சான் மாவட்டத்தின் கோலெ வட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சவப்பெட்டிகள் நெருக்கமாக வைக்கப்பட்டிரு இருந்த போதிலும் அவற்றின் அளவு பெரியதல்ல. பொதுவாக 3 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த சவப்பெட்டிகள் காணப்பட்டன. அவற்றின் வடிவம் அற்புதமானதல்ல. ஆனால் புதைக்கப்பட்ட வடிவம் அற்புதமானது. இது "தலை பராமரிப்பு புதைப்பு"என அழைக்கப்படுகின்றது. அதாவது தலை பகுதி வெண்கல பாண்டத்தினால் செய்யப்பட்டது. கைகளுக்கும் கால்களுக்கும் வெண்கல வாள்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த முறையில் பிணங்களை புதைப்பது சீனாவின் மற்ற இடங்களில் முன்பு இருக்கவில்லை. இது யெலான் இனத்தின் தனிச்சிறப்பியல்பு மிக்க சவ அடக்க வடிவமாகும். இதனால் யெலான் இனத்தவர்கள் ஆவி மீது கொண்ட நம்பிக்கையும் மதக் கருத்தும் ஆழமாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

யெலான் இனத்தின் பழைய சவப்பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்ட வெண்கல பொருட்கள் குவெய்ச்சோ மாநிலத்தின் வெண்கல பண்பாட்டை செழுமையாக்கியுள்ளன. தனிச்சிறப்பு மிக்க வெண்கல போர்க் கருவிகள் நடு புல்வெளிகளிலும் மற்ற பிரதேசங்களிலும் காணப்பட்ட வில்லை. ஆகவே ஆயிரமாண்டு வரலாறு கொண்ட யெலான் கதை கொலெ பண்டைய சவப்பெட்டிகளிலிருந்து காணப்படலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040