• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

ஹுநான் மாநிலத்திலுள்ள சான்ஷா மாவுவான் துயெய் ஹென் கல்லறை

20ம் நூற்றாண்டின் 70வது ஆண்டுகளில் சீனாவின் தென்பகுதியில் சான்ஷா என்ற இடத்தில் மாவுவான்துயெய் என்னும் ஹென் காலக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இது சீனா மட்டுமல்ல உலக முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கல்லறையில் முழுமையாக பராமரிக்கப்பட்ட பெண்ணின் சடலம் கெடாமல் இருந்ததே இந்த திகைப்புக்குக் காரணமாகும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட அந்த சடலத்தின் முகத்தோற்றம் பளபளப்பாகவும் தசைதுடிப்புடனும் காணப்பட்டன. இதன் வின்னணியில் ஒரு கதை உள்ளது. அதேவேளையில் பல வகையான பொருட்களும் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை மிக மதிப்புக்குரிய தொல் பொருட்களாக மதிக்கப்பட்டன. சீன வரலாற்றில் பண்டைய கருவூலம் என பாராட்டப்பட்டன.

சீனாவின் தென் பகுதியிலுள்ள ஹூநான் மாநிலத்தின்  சான்ஷா நகரின் கிழக்கு புறநகரில் மக்களிடையில் பெரிய கல்லறை இருப்பது பற்றிய கதை பரவியது. 20வது நூற்றாண்டின் 70வது ஆண்டுகளில் தற்செயலாக தோண்டிய போது பெரிய கல்லறையின் எஜமானர் உறுதிபடுத்தப்பட்டார். 1971ல் சான்ஷா மாவுவான்துயெயில் மக்கள் தரையடி அறையை அகழ்ந்து பத்து மீட்டர் ஆழம் தோண்டிய போது தொழிலாளர்கள் மிக மெல்லிய கோதுமை மாவு போன்ற வெள்ளை சுண்ணாம்பை கண்டுபிடித்தனர். அதை இரும்புக் கம்பியால் தோண்டிய போது வெள்ளை சுண்ணாம்பு வெளியே வந்தது. அந்தக் குழியில் நாற்றம் இருந்து வீசியது. அந்த காற்று தீப்பட்டதும் எரிந்தது. தண்ணீரை தீயின் மேல் ஊற்றினால் காற்று வேகத்தில் மேலும் கடுமையாக எரிந்தது. கடைசியில் சிமென்ட் தட்டுகொண்டு மூடி தீ அணைக்கப்பட்டது.

நிபுணர்கள் வந்து சோதனையிட்டு அங்கு தரையடியில் கல்லறை இருப்பதாக உறுதிபடுத்தினர். கல்லறை திறக்கப்பட்ட பின் கல்லறையின் அடிப் பகுதியிலும் கல்லறையிலும் 1 மீட்டர் அடர்ந்த வெள்ளை சுண்ணாம்பு நிறைந்திருந்தது. வெள்ளை சுண்ணாம்பின் கீழை மரப்பலகைகள் விரிக்கப்பட்டிருந்தன. சுமார் 2.5 டன்ன எடையுள்ள மர துண்டுகள் 4 லாரிகளில் வெளியேற்றப்பட்டன. சவப்பெட்டி காணபட்டது. அதன் மேல் சில மூங்கில் பாய்கள் கற்றப்பட்டிருந்தன. திறக்கப்பட்ட போது மூங்கில் பாய்களின் நிறம் மஞ்சளாக காணப்பட்டது. பத்து நிமிடம் கழிந்த பின் மூங்கில் பாய் கறுப்பாக மாறி நொறுங்கியது. கல்லறையில் உள்ள 4 சவப்பெட்டிகள் அடுத்தடுத்து வைக்கப்பட்டன. பெரிய பெட்டியின் நீளம் 7 மீட்டர் அகலம் 5 மீட்டர். உயரம் சுமார் 3 மீட்டர்.

சவப்பெட்டி திறக்கப்பட்ட பின் உள்ளேயுள்ள பெண் சடலத்தின் தோற்றம் மிகவும் தெளிவாக இருந்தது. முகம் தெளிவாக காணப்படுகின்றது. தலைமுடி மெலிதாக இருந்தது. கைவிரல்களிலும் கால் விரல்களிலும் உள்ள ரேகைகள் தெளிவாக காணப்பட்டன. தசை பளபளப்பாக இருந்தது. அவர்களின் உடம்பு பாகங்கள் பத்திரமாக பராமரிக்கப்படுகின்றன. உணவு குழாய், வயிறு, சிறு குடல் ஆகியவற்றில் விதைகள் மிஞ்சியவை. இதன் மூலம் சவப்பெட்டியின் எஜமானர் மரணமடைந்த போது ஓட்பயிர் அமோக அறுவடையான காலமாக கருதப்படுகின்றது. இந்த பெண்ணின் பெயர் சிங்ச்சே. கி.மு.2வது நூற்றாண்டில் மரணமடைந்து புதைக்கப்பட்டார்.

"ஆயிரம் ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட பெண் சவம்"கண்டுபிடிக்கப்பட்ட பின் உலகம் முழுவதும் ஆச்சரியப்பட்டது. நிபுணர்கள், பயணிகள், திரைப்படம் எடுப்போர், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் சான்ஷாவுக்கு விரைந்து வந்தனர். மாவுவான்துயெய் பெண் சவம் கண்டுபிடிக்கப்ப்டட பின்னர் குறுகிய காலத்தில் சான்ஷா நகருக்கு வந்து சேர்ந்த மக்கள் தொகை 50 ஆயிரமாக அதிகரித்தது. இதையடுத்து மேலும் இரண்டு பெரிய ரக ஹென் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றில் சிச்செய்யின் கணவரான சாஷா நாட்டின் தலைமை அமைச்சர் பதவிக்குச் சமமான அதிகாரி சீ சான் புதைக்கப்பட்டிருந்தார். அவர்களின் மகன் மற்ற சவப் பெட்டியில் புதைக்கப்பட்டிருந்தார். இந்த மூன்று சவ பெட்டிகள் "சான்ஷா மாவுவான் துவெய் என்னும் ஹென் கல்லறையாக"அழைக்கப்படுகின்றன. இந்த கல்லறையிலிலிருந்து பல தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆடைகள். உணவு பொருட்கள், மருந்து மூலிகைகள், அரக்குப் பொருட்கள், மர மொம்மைகள், இசைக் கருவிகள், பீங்கான்பாண்டங்கள், பட்டுத் துணியில் தீட்டப்பட்ட ஓவியங்கள், மூங்கில் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் முதலியவை பெருமளவில் வெளியேயெடுக்கப்பட்டன. மொத்தமாக 1400க்கும் அதிகமான துணிப் பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன. சீ ஹென் காலத்தில் (கி.மு.206 -25ஆண்டு காலத்தில்)பட்டு துணி களஞ்சியமாக இந்த கல்லறை பாராட்டப்பட்டது. இவற்றில் இரண்டு கோடைகாலங்களில் அணியப்பட்ட ஆடைகள் தனிச்சிறப்பு கொண்டவை. ஆடையின் நீளம் ஒரு மீட்டர். கையின் நீளம் சுமார் 2 மீட்டராகும். அணியப்பட்ட பின் பறவை போல் பறக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட பட்டு நூல்களிலும் மூங்கில் இலைச் சுவடிகளில் எழுதப்பட்ட கட்டுரைகளிலும் அப்போதைய உலகில் புகழ் பெற்ற வானவியல் படைப்புகளும், சீனாவின் மிக பண்டைகால மருத்துவ படைப்புகளான"நாடித் துடிப்பு விதிகள்","52 நோய் பற்றிய சிகிச்சை குறிப்புகள்"ஆகியவையும் அடங்கின. அவை கண்டுபிடிக்கப்பட்டபின், கல்வியியல் கருத்துக்களும் பாரம்பரிய அறிவும் பெரிதும் திருத்தப்பட்டன.

சாஷா மாவுவான் துயெய் கண்டுபிடிப்பு, சீனாவின் தொல் பொருள் ஆராய்ச்சித் துறையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்லறையில் மிக மதிப்புக்குரியது பதப்படுத்தப்பட்ட பண்டைய சவமாகும். கோவையான பொருட்களும், ரகசியமான பட்டு துணி படைப்புகள், மூங்கில் இலைச் சுவடிகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகியவையும் மிக மதிப்புக்குரிய பொருட்களாக அழைக்கப்படுகின்றன. சீனாவின் தொல் பொருள் ஆராய்ச்சியில் இது மிக முக்கிய கண்டுபிடிப்பாகும். மூன்று தனிச்சிறப்புக்கள் ஒரே நேரத்தில் நிலவுவது சீன பண்டைய தொல்பொருள் ஆராய்ச்சியின் தனிப்பெரும் சாதனையாகும். ஆகவே சாஷா மாவுவான் துயெ என்னும் ஹென் கல்லறை 20வது நூற்றாண்டில் சீனாவிலும் உலகிலும் கண்டுபிடிக்கப்பட்ட மிக பெரிய தொல் பொருட்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040