• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

மிங் வமிச மூதத்தையரின் கல்லறை

சீனாவில் அரசர்களின் கல்லறைகளில், மிங் வமிசத்தின்(கி.பீ.1368-கி.பீ.1644) கல்லறைகள் மிகவும் முழுமையாக இருக்கிறன. அவற்றில், மிங் சூ லின் என்னும் கல்லறை, மிங் வமிசத்தின் முதலாவது அரசன் சூ யுவான் சாங், மிங் வமிசத்தின் மூதாதையருக்குக் கட்டிய கல்லறையாகும். சூ யுவான் சாங், சீன வரலாற்றில் பரம்பரைப் புகழ் மிக்க அரசன். ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், ஒரு கோயிலில் மத குருமாரானார். பின்பு, யுவான் வமிசத்தை எதிர்க்கும் விவசாயிகளின் போரில் கலந்துகொண்டு, விவசாயப் படையின் தலைவராக மாறினார். 1368ம் ஆண்டில், சூ யுவான் சாங் அரசன் ஆட்சி பீடத்தில் ஏறி, இறுதியில் சீனாவை ஒன்றிணைத்தார்.

தமது மூதாதையர்களின் நினைவாக, சூ யுவான் சாங் அவர்களுக்கு கல்லறையைக் கட்டினார்.

மிங் சூ லின் என்னும் கல்லறை, கிழக்கு சீனாவின் சு யீ மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீனாவில் நான்காவது பெரிய ஏரியின் கிழக்கு பக்கத்தை ஒட்டியுள்ளது. இக்கல்லறையைக் கட்டி முடிக்க 28 ஆண்டுகள் ஆயின. வரலாற்று பதிவின் படி, இந்தக் கல்லறையில், மூன்று சுற்று சுவர்கள், மூன்று பாலங்கள், ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள் ஆகியவை உள்ளன. தற்போது, இக்கல்லறையில், 250 மீட்டர் நீளமான அஞ்சலி பாதையைக் காணலாம். அதன் வடபகுதியில், நிலத்தடி மாளிகை அமைந்துள்ளது. அஞ்சலிப் பாதையில், 42 கற்சிலைகள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு சிலையும் சில டன் எடை உடையவை.

(படம்:மிங் சூ லின்னின் அஞ்சலிப் பாதை)

1680ம் ஆண்டில், மிங் சூ லின் என்னும் கல்லறை, ஒரு பெரிய வெள்ளத்தினால், ஹொங் சே ஏரியில் மூழ்கியது. 1963ம் ஆண்டில், ஹொங் சே ஏரி வறண்ட போது, மிங் சூ லின்னின் பல பெரிய கற்சிலைகள் ஏரியிலிருந்து வெளியே புலப்பட்டன. இந்தக் கற்சிலைகளில், சிங்கம், குதிரை, மனிதர் முதலிய உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும், 10 மீட்டருக்கும் மேலான உயரம் உடையது. அதன் எடை, சுமார் 10 டன்னாகும்.

தற்போது, இந்தக் கல்லறை, ஒரு நீர் குளத்தில் இருக்கிறது. இந்த குளத்தில் இருந்த நீரை எடுக்க முடியாது. நீண்டகாலத்தில் நீரில் மூழ்கி, காற்று படாமல் இருப்பதால், இந்தக் கல்லறை சீராக பேணிகாக்கப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், ஹொங் சே ஏரி, 1993 மற்றும் 2001 இல், அடுத்தடுத்து வறண்டு போய் நீர் வற்றியது. குறிப்பாக, 2001ம் ஆண்டில், வறட்சியினால், மிங் சூ லின்னின் 1178 மீட்டர் நீளமான வெளி சுவர், வெளியே தோன்றியது. தவிர, மிங் சூ லின் அமைந்துள்ள பண்டைய சி சேள நகரம், அப்போது மிகவும் வளமடைந்திருந்தது. இந்த நகரம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட வில்லை. பின்னர், மண் மற்றும் மணலால் சிறிது சிறிதாக மூடிமறைக்கப்பட்டது. இதனால், பண்டைய சி சேள நகரத்தை, நீரிலிருந்து வெளியே தோண்டி எடுத்த பிறகு, எளிதில் திருத்திக் கட்ட முடியும் என்று சில நிபுணர்கள் கருதினர். எரிமலை வெடித்ததால் தரையில் புதைந்து விட்ட இத்தாலியின் போங்பே நகரம், வெளியே தோண்டி எடுக்கப்பட்டு, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதால், பண்டைய சி சேள நகரமும், சீனாவின் போங்பே என அழைக்கப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040