• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

மிங் சியேள லின் என்னும் கல்லறை

மிங் சியேள லின், மிங் வமிசத்தின் (கி.பி.1368—கி.பி.1644)முதலாவது அரசன்—சூ யுவான் சாங்கின் கல்லறையாகும். இது உலகளவில் மிகப் பெரிய பண்டைகால அரசர்களின் கல்லறைகளில் ஒன்றாகும்.

சூ யுவான் சாங், சீன வரலாற்றில் பரம்பரை புகழ் மிக்க அரசன். ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், ஒரு கோயிலில் மத குருமாரானார். பின்பு, யுவான் வமிசத்தை எதிர்க்கும் விவசாய போரில் கலந்துகொண்டு, விவசாயப் படையின் தலைவராக மாறினார். 1368ம் ஆண்டில், சூ யுவான் சாங் அரசன் ஆட்சி பீடத்தில் ஏறி, இறுதியில் சீனாவை ஒன்றிணைத்தார்.

நாங்ஜிங்கின் புறநகரிலுள்ள இந்தக்கல்லறை, 25 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் சுற்றுச்சுவர், 22.5 கிலோ மீட்டர் நீளமானது. அப்போதைய தலைநகரச்சுவரின் மூன்றில் இரண்டு பகுதியாக இது இருந்தது.

மிங் சியேள லினின் அஞ்சலிப் பாதை, சிப்பாஃங் சாங் என்னும் இடத்திலிரு்நது துவங்குகிறது. இதில் ஒரு கல்வெட்டு உள்ளது. அது, சூ யுவான் சாங்கின் மகனால் எழுதப்பட்டு, சூ யுவான் சாங்கின் சாதனையைப் பாராட்டுகிறது. வழிபாட்டின் மத்திய பகுதியில், சிங்கம், ஓட்டகம், யானை, குதிரை உள்ளிட்ட 12 மிருகங்களின் கற்சிலைகள் அமைந்தன. இந்தப் பெரிய ரக சிலைகள், மிங் வமிச கல் சிற்பக்கலைப்பொருட்களில் மிகவும் அரியவை.

சூ யுவான் சாங்கும், அவருடைய அரசியும் இணைந்து அடக்கம் செய்யப்பட்ட நிலத்தடி மாளிகை, இக்கல்லறையின் மையத்தில் அமைந்துள்ளது. 1997ம் ஆண்டு முதல், உள்ளூர் தொல்பொருள் நிர்வாக அமைப்புகள், உயர் அறிவியல் தொழில் நுட்பத்தையும் பாரம்பரிய வழிமுறையையும் சேர்ந்து பயன்படுத்தி, நிலத்தடி மாளிகையை சுற்றிய 20 ஆயிரத்துக்கு கூடுதலான சதுர மீட்டர் பரப்பளவிலான வட்டாரத்தை ஆய்வு செய்து, சுமார் 20 ஆயிரம் தரவுகளைப் பெற்று, நிலத்தடி சூ யுவான் சாங் கல்லறையின் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிலத்தடி மாளிகை சீராக பேணிகாக்கப்பட்டது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

(படம்:கம்பீரமான மிங் சூ லின்)

(படம்:மிங் சூ லின் அஞ்சலிப் பாதையில் கற்சிலைகள்)

சீன வரலாற்றில் வேறு அரசங்களின் கல்லறைகளை விட, மிங் சியேள லினில் பல வேறுபாடுகள் உள்ளன. கல்லறை மாளிகையின் பாதை, நேரடியாக இல்லை. நிலத்தடி மாளிகையின் மையப்பகுதியில் கட்டப்பட வில்லை. இதற்கு காரணம் தெரிய வில்லை. ஆனால், இந்தக் கட்டும் முறை, மிங் வமிசத்தின் வேறு அரசர்களின் கல்லறைகளைப் பாதித்துள்ளது. மிங் சியேள லின் அமைந்துள்ள மலையின் தரையில் 60 விழுக்காட்டு பரப்பளவு, இயற்கை கட்டிடங்களாகும். கல்லறையின் உச்சியில், பெருமளவிலான பெரிய ரக கல்கள் உள்ளன. இவை, கல்லறை கட்டுமானத்தின் நுண்கலை தேவைகளுக்குப் பொருந்தியது மட்டுமல்ல, மழை மற்றும் கல்லறை கொள்ளையர்களின் சூறையாடல் போன்ற இன்னல்களைத் தடுக்கலாம். குறிப்பாக, மிங் சியேள லினில் மிருகச் சிலைகள், 30 கோடி ஆண்டுகளுக்கு முந்திய பண்டைய இயற்கைக் கற்களால் சிற்பம் செதுக்கப்பட்டன. 22 மிருக கற்சிலைகளில், கடல் தாவரங்கள் முதலிய பழமை வாய்ந்த கற்கள் கண்டறியப்பட்டன. இதனால், மிங் சியேள லினின் கற்சிலைகள், வரலாற்று, கலை மற்றும் அறிவியல் மதிப்பை உடையவை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040