• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

சான் சின் துவே தொல்பொருட்கள்

பரந்து விரிந்த சீனா பண்டைக்காலத்தில், பல்வேறு இனங்களின் சிறிய நாடுகளாக இருந்தது. தற்போதைய சிசுவான் மாநிலம், பண்டைக்காலத்தில் சூ என்னும் நாடாக அழைக்கப்பட்டது. கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளில், இங்கே சான் சின் துவே நாகரிகத்தின் சிதைவுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட போது, உலகம் முழுவதுமே வியந்தது.

சிசுவான் மாநிலத்தின் குவாங்ஹான் நகரிலுள்ள சான் சின் துவே, பண்டைய சூ நாட்டின் மரபுச்சிதிலமாகும். 1929ம் ஆண்டின் வசந்த காலத்தில், அங்கு வசித்த விவசாயி ஒருவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, பச்சைக்கல்லால் தயாரிக்கப்பட்ட ஒரு அழகான அலங்காரப் பொருளைக் கண்டெடுத்தார். பண்டைய சூ நாட்டின் வட்டாரத் தனிச்சிறப்பு மிக்க அந்தப் பச்சைக்கல், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1986ம் ஆண்டில், தொல்லியல் நிபுணர்கள், இரண்டு பெரிய ஆலயங்களின் குளங்களில், 1000க்கும் அதிகமான அரிய தொல் பொருட்களைக் கண்டறிந்து, வெளியே அகழ்ந்து எடுத்தனர். அவற்றுடன் பல வரலாற்று புதிர் கதைகள் அடுத்தடுத்து வெளி வந்தன.

சான் சின் துவேயின் தொல் பொருட்களில் பல பச்சை நிற வெண்கல மூகமுடிகள் இடம்பெற்றன குறிப்பிடத்தக்கவை. அதற்கு முன், மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாநலத்தில், பல அழகான பச்சை வெண்கல கருவிகள் வெளியே தோண்டி எடுக்கப்பட்டன. ஆனால், அவற்றில் மூகமுடி இல்லை. சான் சின் துவே பகுதியில் கிடைத்த தோண்டப்பட பச்சை வெண்கல மூகமுடிகள், தடித்த புருவம், பெரிய கண்கள், நீள மூக்கு முதலியவற்றுடன், முகம் மிகவும் விநோதமாக இருக்கின்றன. இந்த மூகமுடிகளின் காதுகளில் சிறிய துளை காணப்படுகிறது. தற்போது அங்கு வசிக்கும் மக்களின் முகத்தில் இருந்து வேறுபட்ட இந்த மூகமுடி, எதைப் பிரதிபலிக்கிறது? இக்கேள்விக்கு தொல்லியல் நிபுணர்களால் பதில் காண முடியவில்லை.

சான் சின் துவே பகுதியில், ஒரு உயரமான பச்சை வெண்கல மனிதச் சிலை அகழ்ந்து எடுக்கப்பட்டது. 170 சென்டி மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை, உலகிலேயே மிகவும் உயரமான பச்சை வெண்கலச் சிலையாகும். அதன் முகத்தைப் பார்த்தால், ஒரு கடவுள் அல்லது மந்திரவாதி போன்று உள்ளது. அது ஒரு கோயிலைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தவிர, சான் சின் துவே பகுதியில், தங்கச் செங்கோல், பச்சை வெண்கல மரம், தந்தம் ஆகியவை கிடைத்தன. 1.42 மீட்டர் நீளமான தங்கச் செங்கோலில் அழகான மர்மமான வேலைப் பாடுகள் இருக்கின்றன. சுமார் நான்கு மீட்டர் உயரான பச்சை வெண்கல மரம், மூன்று பகுதிகளாகவும், ஒன்பது கிளைகளாகவும் பிரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிளையிலும், சூரியனின் சின்னம் போன்ற பறவை செதுக்கப்பட்டுள்ளது.

சான் சின் துவே பகுதியில் கண்டறியப்பட்ட தொல் பொருட்களில், பண்டைய சூ நாட்டின் தனிச்சிறப்புக்களும், மேற்காசிய மற்றும் வேறு வட்டாரங்களின் பண்பாடும் கலந்து காணப்படுகின்றன. குறிப்பாக, பச்சை வெண்கல சிலை, தங்கச் செங்கோல் முதலியவை, உலகப் புகழ்பெற்ற மாயா மற்றும் பண்டைய எகிப்துப் பண்பாட்டுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை என்று நிபுணர்கள் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தனர். தவிர, வழிபாட்டுக் குகைகளில் கிடைத்த 70 தந்தங்களில் இருந்து, பண்டைகாலத்தில், சூ நாடு, அதன் அண்டை நாடுகளுடனும், வேறு தொலைவுப்பகுதிகளுடனும் வர்த்தகம் நடத்தியதைத் தெரிந்து கொள்ளலாம். சான் சின் துவே பகுதியில் கிடைத்த பச்சை வெண்கல சாதனங்களில், மேற்காசியா, தூர கிழக்கு, ஐரோப்பா உள்ளிட்ட வட்டாரங்களின் பண்பாடுகளின் பாதிப்பு தெரிகிறது. சான் சின் துவே தொல் பொருட்கள், சீனத் தொல்லியல் மற்றும் வரலாற்று வெற்றிடங்களை நிரப்பியுள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040