• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

பீங்கானும் சீனாவும்

ஆங்கிலத்தில் "China"என்றால் "சீனா" என்று குறிக்கின்றது.

"சீனா"என்றால்"பீங்கான்" என்று பொருள்படுகின்றது. நீண்டகாலமாக சீனா "பீங்கான்" நாடாக அழைக்கப்படுகின்றது. சீனாவுக்கும் பீங்கானுக்குமிடையில் ரகசியம் என்ன?சிங் என்பதில் இருந்து பீங்கான் என்ற சொல்லின் பீங் வருவானது, மேலும் களிமண்ணில் இருந்து பீங்கான் உருவெடுப்பதை இது குறிக்கின்றது. பீங்கானின் தனிச்சிறப்பியல்பு மூல மண்ணின் அடையாளமும் அதற்கு உண்டு. சீனாவில் மிக முற்காலத்திய சிங் பீங்கான் சீனாவின் சான்சீ மாநிலத்தின் சியா மாவட்டத்து லூன்சான் பண்பாட்டு சிதிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 4200 ஆண்டுகள் அது நீடித்திருந்தது என்று தொல் பொருள் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சீனாவில் பீங்கான் தோன்றிய காலம் துங் ஹென் காலமாகும்.

(கி.பி.23-220 பீங்கான் சீனாவின் தென் பகுதியிலுள்ள ச்செசியாங் மாநிலத்தில் தோன்றியது. பின் தயாரிப்பு நுட்பம் தெற்கிலிருந்து வடக்கிற்கு பரவியது. அப்போது போதியளவில் அது வளர்ச்சியடைந்திருந்தது. இதில் மிக முக்கியமானது. வளர்ச்சியாக வெள்ளை பீங்கான் உருவாயிற்று. நீல நிற பீங்கானிலிருந்து வெள்ளை பீங்கானாக வளர்ந்தது. பீங்கான் தயாரிப்புக்கு தேவைப்படும் மண்ணில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் வெள்ளை பீங்கானாகவும் இருப்பு அதிகமா உள்ளதால் நீல நிற பிங்காங்காக பதனிடப்பட்டது. பெரும்பாலான வண்ணப் பீங்கான்களின் பின் பகுதி வெள்ளையாக காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் வண்ணம் பூசப்படலாம். ஆகவே வெள்ளை பீங்கானின் தோற்றம் பீங்கானின் வளர்ச்சிக்கு ஆழ்ந்த பாதிப்பு விளைவித்தது.

கி.பி.10வது நூற்றாண்டு முதல் 13வது நூற்றாண்டு வரையான காலம் தான் சுன் ஆட்சி காலமாகும். அப்போது சீனாவின் பீங்கான் தயாரிப்பு தொழில் நுட்பம் தொடர்ந்து மேம்பட்டிருந்தது. தான் சான் செய் என்பது அப்போது விளைந்த வண்ண பீங்கான் பொருளாகும். சீன தேச ஓவியம், சிற்பம் ஆகிய தொழில் நுட்பத்தை மேற்கொண்டு ஒரே பீங்கானில் சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை மூன்று நிறங்களை கொண்டு தீட்டப்பட்ட கைவினை பொருள் தான்சான்செய் ஆகும்.

மின் (கி.பி.1368-1644)சின் (கி.பி.1644-1911)இரண்டு ஆட்சிகாலங்களில் பீங்கான் தயாரிப்பு துறை உச்ச நிலையில் ஓங்கி வளர்ந்திருந்தது. அதன் எண்ணிக்கையும் தரமும் உச்ச நிலையில் உயர்ந்தன. தெற்கில் உள்ள சிங்தெச்சன் என்னும் சிறிய நகர் "பீங்கான் தலைநகர்"என அழைக்கப்பட்டது. இப்போதும் கூட சீனாவில் மிக உயர் தரமான பீங்கான் அங்கேதான் தயாரிக்கபடுகின்றது. 8வது நூற்றாண்டில் சீனா வெளிநாடுகளுக்கு பீங்கான் ஏற்றுமதி செய்தது. அதற்கு முன் புகழ்பெற்ற "பட்டு பாதை"மூலம் சீனாவின் சீன-வெளிநாட்டு வர்த்தகமும் பண்பாட்டு பரிமாற்றமும் நடைபெற்றன. பீங்கான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பீங்கான் நாடு என சீனா உலகில் புகழ் பெற்றது.

துவக்கத்தில் ஆசியாவில் மட்டுமே சீனா பீங்கான் ஏற்றுமதி செய்தது. 17வது நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பிய மன்னர் குடும்பங்களும் ஆட்சியாளர்களும் சீன பீங்கான் பாண்டங்களை சேகரிபபதில் அக்கறை காட்டினர். பின் போருத்துக்கம் நாடு புதிய கப்பல் தடத்தை துவக்கிய பின் பீங்கான் ஐரோப்பிய சமூகத்தில் மிக மதிப்புக்குரிய அன்பளிப்புப் பொருளாக கருதப்பட்டது. அப்போது ஐரோப்பாவில் மிகவும் பிரமலமடைந்திருந்த வரவேற்கப்பட்ட Rococo என்னும் கலைப் பாணியும் சீன பாணியும் மக்களால் வரவேற்கப்பட்ட பாணிகளாகும். இதனால் சீன பாணியிலான பீங்கான் பொருட்கள் ஐரோப்பாவில் பரவின. 17வது நூற்றாண்டில் சீனா ஆண்டுக்கு 2 லட்சம் பீங்கான் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 18வது நூற்றாண்டில் மிக கூடுதலான ஆண்டில் சுமார் 10 லட்சம் பீங்கான் பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பீங்கான் பாண்டங்கள் "சைநாகிளே"என்ற பெயரில் பிரிட்டனிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெருமளவில் பரவலாகியது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040