• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறையிலுள்ள செப்பு வாகனங்களும் குதிரைகளும் எவ்வாறு தயாரிக்கப்பட்டன?

1989ஆம் ஆண்டில் சீனச் சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வுக் கூடத்தின் ஹென் வமிசக் காலத்து சாங்ஆன் நகர ஆராய்ச்சிக் குழு தற்போதைய சிஆன் நகரின் ஸ்யாங் மாவட்டத்தைச் சேர்ந்த லியுசன்பௌ கிராமத்தில் ஒரு காய்கறி வயலில் தோண்டிக் கொண்டிருந்த போது, சுமார் 2100ஆண்டுகளுக்கு முந்திய மேற்கு ஹென் வமிசக் காலத்தில் சுடுமண் படைவீரர்களின் உருவச் சிலைகளைத் தயாரிக்கப் பயன்பட்ட 21 பெரிய சுடுமண் சூளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் பல்லாயிரம் சுடுமண் படைவீரர்களின் உருவச்சிலைகளும் தோண்டியெடுக்கப்பட்டன. மரணமடைந்த பேரரசர்களுடன் இணைந்து புதைக்கப்படுவதற்காகச் சுடுமண் படைவீரர்களின் உருவச்சிலைகளைச் சுடுவதற்கென பயன்படுத்தப்பட்ட சுடுமண் சூளை இது. இத்தகைய சூளைகள் அளவில் பெரியவை. இவற்றிலுள்ள 2 சூளைகளில் படைவீரர்களின் துவக்க நிலையிலான உருவச்சிலைகள் அரை குறையான நிலையில் காணப்பட்டன. ஒரு சூளையில் இவற்றின் எண்ணிக்கை 350 முதல் 400 வரையாக இருந்தன. அப்படியானால், 21 சுடுமண் சூளைகள் மூலம் ஒரு தடவையில் 7350 முதல் 8400 வரையான சுடுமண் படைவீரர்களின் உருவச்சிலைகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம். இத்தகைய உற்பத்தி அளவைப் பார்த்தால், பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறையில் இவ்வளவு அதிகமான சுடுமண் படைவீரர்களின் உருவச்சிலைகள் புதைக்கப்பட்டிருந்தது என்பதில் ஆச்சரியமில்லை. இயல்பானதே.

இவை கண்டுபிடிக்கப்பட்டதால், படைவீரர்களின் சுடுமண் உருவச்சிலைகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பது பற்றி மக்கள் அறிந்துகொள்ள முடிந்தது. இந்த உருவச்சிலைகளனைத்தும் குறிப்பிட்ட அளவில் துவக்க நிலையில் மாதிரி எடுத்து, தயாரிக்கப்பட்டன. அதாவது, சூளையில் சுடுவதற்கு முன், படைவீரர்களின் உருவச்சிலைகளின் தலைப்பகுதியிலுள்ள கண்கள், மூக்கு, காதுகள், வாய் ஆகியவை தனித்தனியாகச் செதுக்கப்பட வேண்டி இருந்தது. சுடுவதற்கு முன் அவற்றில் வண்ணம் தீட்டப்படவில்லை. சுடப்பட்ட பின் அவற்றில் பெரும்பாலானவை வெண் நிறம் பூசப்பட்டன. சுடப்படும் போது, இந்தத் துவக்க நிலையிலான உருவச்சிலைகள், சுடுமண் சூளையில் எவ்வாறு வைக்கப்பட்டிருந்தன என்பது பற்றி விளக்கிக்கூற வேண்டும். மக்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, துவக்க நிலையிலான உருவச்சிலைகளின் கால்கள் கீழ் நோக்கி வைக்கப்படவில்லை. மாறாக, அவற்றின் தலைகள் கீழ் நோக்கியும் கால்கள் மேலே நோக்கியும் வைக்கப்பட்டிருந்தன. இதற்கு அறிவியல் காரணம் உண்டு. அதாவது, மனிதர் உடம்பின் பாரம், கீழ் பகுதியை விட, மேற் பகுதியில் அதிகமாக இருக்கும். தலையைக் கீழே நோக்கி வைத்தால் உடம்பு முழுவதும் அசையாமல் இருந்து, எளிதில் விழாது. சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சீன உழைப்பாளர்கள், பொருட்களுடைய எடையின் மையம் எங்கே உள்ளது என்ற அறிவியல் தத்துவத்தைப் பயன்படுத்தியுள்ளனர். பேரரசர் சிங்ஸ்ஹுவானின் கல்லறையும், அதிலுள்ள சுடுமண் படைவீரர்களின் உருவச்சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்ட பின், சுடுமண் குதிரைகளைத் தயாரித்த போது, இந்த அறிவியல் தத்துவத்தைப் பயன்படுத்தத் தவறியதால், பல முறை தோல்வியடைந்தது. அதாவது, குதிரைகளின் துவக்க நிலையிலான உருவச்சிலைகள் சூளையில் வைக்கப்பட்ட போது, குதிரைகளின் கால்கள் கீழே நோக்கி வைக்கப்படிருந்ததே இதற்குக் காரணம்.

தவிர, சிங் வமிசக்காலத்தில் சுடுமண் சூளையில் வேலை செய்வோபின் பெயர்களைப் பதிவு செய்யும் முறையும் நடைமுறையில் இருந்தது. சுடுமண் படைவீரர்களின் உருவச்சிலைகளைத் தயாரிக்கும் தொழிலாளர்கள், தாங்கள் தயாரித்த உருவச்சிலைகளின் மேல், தங்களது பெயர்களைச் செதுக்க வேண்டும் என்பது ஒரு கட்டளை. அக்காலத்தில் பேரரசர்கள், சுடுமண் படைவீரர்களின் உருவச்சிலைகளின் தரத்தையும் எண்ணிக்கையையும் சோதிப்பதற்கு இது துணை புரிந்தது. ஆனால், இதன் விளைவாக, ஏராளமான தொழில் நுட்ப வல்லுநர்களின் பெயர்களை இளம் தலைமுறையினர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கொங்பிங், கொங்சியாங் உள்ளிட்ட 85 தொழிலாளர்களின் பெயர்கள் தெளிவாக அறியப்படுகின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040