• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

ஷென்சி மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாமென் கோயில்

சீனாவின் ஷென்சி மாநிலத்தின் புபொங் மாவட்டத்தில் அமைந்துள்ள பாமென் கோயில் சாக்கியமுனி சிலை வைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கோயில் ஆகும்.1987ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சீனத் தொல் பொருள் பணியாளர்கள் பாமென் கோயின் புத்தக் கோபுரத்தை புனரமைக்கும் போது, கோபுரத்தின் கீழ் ஒரு தரைக்கடி மாளிகை எதிர்பாராதவாறு கண்டுபிடிக்கப்பட்டது. மாளிகையில் வைக்கப்பட்டிருந்த மதிப்புமிக்க தொல் பொருட்கள் உலகை வியப்படைய செய்தன.

பாமென் கோயில் சீஆன் நகருக்கு மேற்கில் 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புபொங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சீனாவின் வட பெய் வம்ச காலத்தில் (கி.பி 499ஆம் ஆண்டளவில்)கட்டப்பட்டது. கி.பி 7வது நூற்றாண்டின் தாங் வம்ச காலம், பாமென் கோயில் முழுமையாக புகழ்பெற்றிருந்து காலமாகும். தாங் வம்ச ஆட்சி ஏராளமான மனிதர் மற்றும் நிதி ஆற்றலை செலவழித்து இந்த கோயிலை விரிவாக்கி கட்டியது. இறுதியில் இந்த கோயில் 24 முற்றங்களைக் கொண்ட ஒரு மாபெரும் கோயிலாக மாறியது. கோயிலில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தர்கள் வாழ்ந்தனர்.

கோபுரத்தின் கீழ் மதிப்புமிக்க புத்த சின்னங்கள் புதைக்கப்பட்டிருந்தன, அப்போது முதல் யாத்திரைகள் வந்த வண்ணம் இருந்ததால் இந்த கோயில் புகழ்பெற்றது. சீன வரலாற்று பதிவுகளின் படி, தாங் வம்ச காலத்தில் 8 பேரரசர்கள் பல தடவை புத்தரின் எலும்பை எடுத்து அரண்மனையில் வைத்தனர். அத்துடன் அவர்கள் ஏராளமான நகைகளை இந்த கோயிலின் தரைக்கடி மாளிகைக்கு வழங்கினர். பின்னர் போர் மற்றும் நில நடுக்கத்தினால், பாமென் கோயிலின் செல்வாக்கு மலையேறிவிட்டது.

பாமென் கோயில் பல நுறு ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் 1981ஆம் ஆண்டு மழையினால் இடிந்து விழுந்தது. 1987ஆம் ஆண்டு ஷென்சி மாநிலம் இந்த கோயிலுக்கான தொல் பொருள் ஆராய்ச்சி குழு நிறுவப்பட்டு, கோபுரத்தின் அடி தளத்தை தோண்டி ஆராய்ச்சி செய்ய துவங்கியது.

பாமென் கோயிலின் தரைக்கடி மாளிகையின் நீளம் 21.4 மீட்டர், பரப்பளவு 31.48 சதுர மீட்டர். மாளிகையில், நடை பாதை, மேடை, சுரங்க வழி, முன் அறை, மத்திய அறை, பின் அறை ஆகிய ஆறு பகுதிகள் பிரிக்கப்படுகின்றன. இந்த மாளிகையில் ஏராளமான தாங் வம்ச தொல் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. புத்த சின்னங்கள் நகைகள், பளப்பளப்பான பொருட்கள் பீங்கான்கள், துணிகள் என மொத்தம் 900 பொருட்கள் இருந்தன. குறிப்பாக தரைக்கடி மாளிகையில் புத்த சின்னங்கள், கண்டுபிடிக்கப்பட்டதால், ச்சின் சி ஹுவாங் பேரரசரின் கல்லறையில் சுடுமண் படைவீரர் சிலைகளுக்கு பிந்திய இன்னொரு கண்டுபிடிப்பாகும். இது சீன வெளிநாட்டு புத்த மதத்துறையிலும் உலக பண்பாட்டு வரலாற்றிலும் மாபெரும் நிகழ்ச்சியாகும்.

புத்த சின்னங்கள் தவிர, பட்டுத் துணித் தொல் பொருட்களும் காணப்பட்டன. சீனாவின் கான்சு மாநிலத்தின் தூன்ஹுவாங்கிற்கு பின், தாங் வம்ச காலத்தில் மிக அதிகமான, பல்வகையுடைய, மிக மதிப்புள்ள பட்டுத் துணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது, சீன தாங் வம்சகால பட்டுத் துணியின் கிடங்கு என்றும் அழைக்கப்பட்டது.

இந்த கோயிலில் சுமார் நூறு ஒளிமயமான தங்க மற்றும் வெள்ளி பாத்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அழர்வமான நிற பீங்கான் பாத்திரங்களை கண்டு சீன நிபுணர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த பீங்கான் பாத்திரங்கள் பற்றி தாங் வம்ச ஆட்சியின் மாளிகையில் சிறப்பாக பயன்படுத்தப்பட்ட பீங்கான் பாத்திரங்களாகும். அவற்றின் செய்முறை எப்பொழுதோ தொலைந்து போயிற்று. இந்த பாத்திரங்கள் சீன வரலாற்று பதிவேட்டில் மட்டும் பதிவு செய்யப்பட்டது. உண்மை பொருளை பிற்காலத்தவர்கள் யாரும் கண்டறியவில்லை. இந்த பாத்திரத்தின் மெருகு மிக சிறப்பாக இருந்ததால், கிண்ணத்தில் நீர் ஊற்றினால் மிகவும் தெளிவாகவும் தூய்மையாகவும் இருக்கின்றது.

பாமென் கோயிலின் தரைக்கடி மாளிகையிலிருந்து எடுக்கப்பட்ட மதிப்புமிக்க தொல் பொருட்களை பாதுகாத்து, காண்பிக்கும் வகையில், உள்ளூர் அரசு அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது. சீனத் தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர்களும் ஜெர்மன் நிபுணர்களுடன் ஒத்துழைத்து, மாளிகையில் இருந்த பட்டுத் துணிப் பொருட்களை உயரிய அறிவியல் முறையில் பாதுகாத்துள்ளனர். 2002ஆம் ஆண்டு, தரைக்கடி மாளிகையில் பேணிக்காக்கப்பட்ட புத்தரின் எலும்புகள் சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு வரவேற்கப்பட்டு வழிபாடு செய்ய வைக்கப்பட்டது. ஒரு திங்கள் காலத்துக்குள் சுமார் 40 லட்சம் பேர் அங்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040