• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

ஸ்முவூதின் என்னும் உலகிலேயே மிகப் பெரிய செப்புப் பாத்திரம் எவ்வாறு உண்டாக்கப்பட்டது?

1939ஆம் ஆண்டின் மார்ச் திங்களில் மத்திய சீனாவின் ஹொனான் மாநிலத்து அன்யாங் நகரைச் சேர்ந்த வூக்குவென் கிராமத்தின் வட பகுதியிலுள்ள ஒரு வயலில் ஸ்முவுதின் என்னும் உலகிலேயே மிக பெரிய செப்புப் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. 875 கிலோகிராம் எடையுடைய இப்பாத்திரத்தின் உயரம் 133 சென்டி மீட்டர். நீளம் 110 சென்டி மீட்டர். அகலம் 78 சென்டி மீட்டர். இவ்வளவு பெரிய அளவிலான சதுர வடிவ பாத்திரம்-ஸ்முவுதின் எதற்குப் பயன்படுத்தப்பட்டது? அது எவ்வாறு தயாரிக்கப்பட்டது? வழிபாடு செய்வதற்கு அது பயன்படுத்தப்பட்டது. ஸ்முவு ஆகிய 3 எழுத்துக்கள் பற்றி நிபுணர்கள் விளக்கிக் கூறினர். அதாவது சாங் வமிசக் காலத்தில் பேரரசர் சூகங், காலஞ்சென்ற தாய் வுவுக்கு வழிபாடு செய்த போது பயன்படுத்தப்பட்ட சாதனம் தான் ஸ்முவுதின் என்னும் இந்தப் பாத்திரம் என்பதைச் சான்றுகள் நிரூபித்துள்ளன. இவ்வளவு பெரிய செப்புப் பாத்திரம் தயாரிக்கப்பட்ட போது, அதன் மேல் பகுதி, நடுப்பகுதி மற்றும் கீழ் பகுதிகள் மூன்று பிரிவுகளாகப் பிரித்து படிப்படியாக வார்ப்பு உலையில் வைத்து, தனித்தனியாக தயாரிக்கப்பட்ட பின், இறுதியில் ஒன்றாக ஒட்டப்பட்டன என்று நிபுணர்கள் முன்பு கருதினர். ஆனால் தற்போது இது தொடர்பான புதிய கருத்து தோன்றியுள்ளது. ஸ்முவுதின் என்னும் பாத்திரம், பாரம்பரிய தொழில் நுட்பம் மூலம், ஒரே வார்ப்பில் தயாரிக்கப்பட்டது என்று நிபுணர்கள் அண்மையில் மேற்கொண்டு ஆராய்ச்சியின் முடிவு காட்டியுள்ளது.


1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040