
முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சி ஜூன் 6ஆம் நாள் சீனாவின் யூனான் மாநிலத்தின் தலைநகர் குவேன் மிங்கில் துவங்கியது. தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத் துறை, நகைகள், தேயிலை, அறிவியல் தொழில் நுட்பம் முதலிய துறைகளிலுள்ள புகழ் பெற்ற தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. எழில் மிக்க நகைகள் சீன நுகர்வோரின் கண்ணார்வத்தை ஈர்த்து வருகின்றன. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் நகை பொருட்களை தயாரிக்கும் முக்கிய நாடுகளிலிருந்து நகைகள் பொருட்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வைரம், நகை, அரிய மணிக்கல் முதலியவை இதில் அடங்கும்.
1 2 3 4 5