• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவிலான தெற்காசிய நகைச் சந்தை
  2013-07-04 10:19:20  cri எழுத்தின் அளவு:  A A A   

நகை வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கான பெரிய நாடான இலங்கை, சீன தெற்காசிய பொருட்காட்சி சந்தைக்கு அழகான நகைகளைக் கொண்டு வந்துள்ளது. புகழ் பெற்ற இலங்கை செம்ஜெம்ஸ் நகை தொழில் நிறுவனம், சீனா, மலேசியா, மாலத் தீவுகள் முதலிய நாடுகளில் அதன் கிளை நிறுவனங்களை நிறுவியுள்ளன. அந்நிறுவனத்தின் விற்பனை மேலாளர் அரூஸ் கூறுகையில், இலங்கை சிவப்பு மற்றும் நீலவண்ண மணிக்கல்கள் மிகவும் சிறப்பாக விற்கப்படுகின்றன. அவை சீனாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அதிகமாக விற்பனை ஆகின்றன.

சிறந்த நகைகளுக்கு, மூலப்பொருட்களின் தரம் முக்கியமானது. மேலும் நகைகளைத் தயாரிக்கும் செய்முறை மேம்பட்டு வருகின்றன. பாரம்பரிய தெற்காசிய நகைகள் முக்கியமாக கைவினை தொழிலாகவே இருக்கின்றன. தற்போதைய நகை தயாரிப்பு, கைவினை நுட்பத்தை இயந்திர வடிவமைப்பதுடன் இணைக்கிறது. இதனால் நகைகளின் ஈர்ப்பாற்றல் மேலும் வலுபடுத்தப்படும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040