• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவிலான தெற்காசிய நகைச் சந்தை
  2013-07-04 10:19:20  cri எழுத்தின் அளவு:  A A A   

பெருமளவிலான சந்தையை விரிவாக்கி, மேலதிக வெளிநாட்டு ஒத்துழைப்பைத் தேட, சீனாவின் பல நகை விற்பனை வணிகர்கள், தெற்காசிய நகை வணிகர்களுடன் சேர்ந்து, சீன-தெற்காசிய பொருட்காட்சியில் காட்சி அரங்குகளை நிறுவினர். சீனாவின் நுகர்வோர், மாபெரும் உள்ளார்ந்த வாங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். சீன நகை வணிகர்களுடன் ஒத்துழைப்பது, தெற்காசிய வணிகர்களுக்கு அதிகமான வணிக வாய்ப்பை வழங்கும். அதேவேளை, சீன நகை தொழில் நிறுவனங்கள் தெற்காசிய நகை சந்தையை விரிவாக்க வேண்டுமானால், அப்பிரதேசத்தின் உள்ளூர் தொழில் நிறுவனங்களிடமிருந்து கற்றுக்கொண்டு, நியாயமான முறையில் போட்டியிட வேண்டும். சீனாவின் ஷாங்காய் வேன்யு நகை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ZhengMingShe கூறியதாவது

"சிவப்பு மற்றும் நீலவண்ண மணிக்கல் உட்பட்ட, சில நகைகளை, நாங்கள் வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்குள் உட்புகுத்தி வருகிறோம். சில தெற்காசிய நாடுகள், அரிய மணிக்கல், இயற்கை மணிக்கல் ஆகிய நகைகளின் தயாரிப்பில் சிறப்பாக விளங்குகின்றன. நகை மொசைக்ஸ் துறையைக் கூறினால், சீனாவின் ஹாங்காங், ஷாங்காய் முதலிய பிரதேசங்களின் தொழில் நிறுவனங்கள் மென்மேலும் பக்குவமடைந்த தொழில்களைக் கைபற்றி வருகின்றன. உள்நாட்டில் இப்படி வலுவான நுகர்வாற்றல் இருப்பதால், சீனாவின் பொருட்காட்சியில் கலந்து கொள்ள வெளிநாடுகளின் தனிச்சிறப்பு வாய்ந்த நகை தொழில் நிறுவனங்களை அழைக்க விரும்புகிறேன்."என்று ZhengMingShe கூறினார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040