• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவிலான தெற்காசிய நகைச் சந்தை
  2013-07-04 10:19:20  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு முற்பாதியில் உலகத் தங்கச் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டபோதிலும், தங்கம் உள்ளிட்ட நகைகள் மீது சீன நுகர்வோரின் வலுவான கொள்வனவு ஆற்றல் குறைய வில்லை. தெற்காசிய நகை வணிகர்கள் சீனச் சந்தையில் கவனம் செலுத்துவதன் முக்கிய காரணமாக அதுவும் இருக்கிறது.

தெற்காசிய நாடுகளின் நகைகள், முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சியில் ஈர்ப்பாற்றலை வெளிப்படுத்தி, சிறப்பாக விற்கப்படுகின்றன. எதிர்காலத்தில் கூடுதல் தொழில் நிறுவனங்களும், தனிநபரும் நகை துறையில் முதலீடு செய்வது உறுதி. நகைகளின் நுகர்வு, சேகரிப்பு, முதலீடு ஆகியவை, புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடை உறவு மென்மேலும் நெருங்கி வளர்ந்து வரும். வர்த்தகத் தொடர்பு, படிப்படியாக ஆழமாகும் பண்பாட்டுப் பரிமாற்றம் முதலியவற்றுடன், தெற்காசிய நகைகள் இரு தரப்பின் மக்களுக்கு மேலதிக நன்மைகளை விளைவிக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040