
ஆண்டுதோறும் மார்ச் மாத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டு மார்ச் 13 ஆம் நாள் உலக சிறுநீரக நாளாகும். சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக வலி, சிறுநீரக கல், சிறுநீரக எரிச்சல் போன்ற சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்பி, மனிதர் மேம்பட்ட உடல்நலத்தோடு வாழ்வதை பரப்புரை செய்வதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எலும்புக் கூட்டுக்குள் சிறுநீரகங்கள் உள்ளன. அவரை விதை வடிவில் சிறிதாக இருக்கும் இரு சிறுநீரகங்களுக்கு தான் உடல் முழுவதும் ஓடும் மொத்த இரத்தத்தில் 25 விழுக்காடு செல்கிறது.




அனுப்புதல்