• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிறுநீரக நோய் தடுப்பு
  2014-03-18 16:58:00  cri எழுத்தின் அளவு:  A A A   

நமது உடலுக்கு தேவைப்படும் மொத்த ஆக்சிஜனில் பத்து விழுக்காடு சிறுநீரகத்துக்கு செல்கிறது. ஒரு நிமிடத்துக்கு 2.4 லிட்டர் இரத்தத்தை வடிகட்டி, அதிலுள்ள கழிவுகளை சிறுநீரகங்கள் நீக்குகின்றன. உடலுக்கு தேவையான நீர்சத்தை சமநிலையில் வைக்க இவை உதவுகின்றன.

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் சிறுநீரகங்கள் உதவுகின்றன. சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகின்ற எரித்தோபாய்ட்டின் என்ற நிணநீரை சிறுநீரகங்கள் சுரக்கின்றன. இந்த நிணநீர் சுரப்பியில் பிரச்சனை ஏற்பட்டால், இ ரத்த சோகை உண்டாகும்.

இந்தியாவில் பத்தில் ஒருவர் தீவிர சிறுநீரக நோயால் துன்பப்படுவதாகவும், ஐந்து இலட்சம் பேருக்கு வாழ்நாள் முழுவதும் சிறுநீரக சுத்திகரிப்பு அல்லது உறுப்பு மாற்று சிகிச்சை உடனடி தேவையாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதில் ஆறாயிரம் பேரே புதிய சிறுநீரகம் பெறுகின்றனர். முப்பதாயிரம் பேர் தான் சிறுநீரக சுத்திகரிப்பு பெற முடிகிறது. மீதியுள்ள நான்கரை இலட்சம் பேருக்கு சரியான சிகிச்சை கிடைக்காததால், வாழ்வது சில வாரங்கள் என்ற நிலை தான் தற்போது உள்ளதாக தெரியவருகிறது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040