• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் மிகக் குறைந்த வருமானம் பெற்ற தோ ஜீயின் நவீன பெரிய வீடு
  2014-08-27 11:11:27  cri எழுத்தின் அளவு:  A A A   

என் பழைய வீட்டை இடித்தபோது, எனக்கு கிடைத்த இழப்பீடு 4 இலட்ச்சத்து மேலான யுவானாகும். புதிய வீட்டில் குடி பெயர்ந்த பின், மீண்டும் 60 ஆயிரம் யுவானை பெற்றுள்ளேன். பழைய குடிப்பிடம் இடிக்கப்பட்டு மறுபடியும் கட்டியமைக்கப்படுவதால், நான் வசிக்கும் வீடு மேலும் நன்றாக

மாறியுள்ளது. அது மட்டுமல்ல, மேலதிக ஆபத்தான வீட்டில் வசிப்பவர்கள் பாதுகாப்பான வசதியான வீட்டில் வசிக்கலாம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் கொள்கைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தோ ஜீ சொன்னார்.

சுமார் 70 வயதாகிய தோ ஜீ மிகக் குறைந்த வருமானம் பெற்றவர். அரசின் வாழ்க்கைக்கான குறைந்தபட்ச மானியத்தை பெறுகிறார். நாசு பகுதியில் மேற்கொண்டுள்ள 'புதிய வீடு பழைய வீட்டை மாற்றுதல்'எனும் பணித்திட்டத்தால், 200க்கு மேலான சதுர மீட்டர் பரப்பளவுடைய வீட்டிலே வசிக்கிறார். இந்தப் பணித்திட்டம் ச்சே சியாங் மற்றும் லியாவ் நீங் மாநிலங்களின் உதவியில் நடைமுறைப்படுத்துகிறது. தோ ஜீ போல, ச்சே சியாங் குடியிருப்பிடத்தில் கடி புகுந்துள்ள 590 குடும்பங்களில், 90 விழுக்காடுக்கு மேலானோர் நாசு பகுதியில் மிகவும் குறைந்த வருமானம் பெற்றவர் அல்லது வேலை இல்லாதவர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040