கடல்மட்டத்திலிருந்து3000 மீட்டர்உயரமுள்ளசீனாவின் சின்காய்-திபெத் பீடபூமியில்திபெத் எருமைகள் வளர்ந்துள்ளன. பீடபூமியில் கப்பல் என இது பாராட்டப்படுகிறது. உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து இது பிரிக்கப்பட முடியாதது. திபெத் எருமையின் பால், இறைச்சி, தோல் ஆகியவை மட்டுமல்லாமல், அதன் சாணியும் பசுமையான எரிப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
திபெத் இன மொழியில் யாகுபோ, பழமை திபெத் எருமைஎன வுயுச்சு தன்னை அழைத்து வருகிறார். அதற்கு ஒரு கதை உண்டு. 1976 முதல் 1988ஆம் ஆண்டு வரை, அவர் திபெத்தின் நாச்சு பிரதேசத்தில் பணிபுரிந்தார். அது கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரமானது.