ஒரு முறை, அவர் நாச்சுமாவட்டத்திலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற போது, கடும் பனியால், வாகன அணிசாலையில் ஐந்து நாட்களாகச் சிக்கிக்கொண்டது. அவர்களைக் காப்பற்ற, உணவுகளைக் கொண்ட வாகனங்களும் குதிரையும்மாவட்டத்திலிருந்து வர முயற்சி செய்தன. ஆனால், தோல்வியடைந்தது. இறுதியில், திபெத் எருமைகள் அடர்ந்த பனியை மிதித்து வந்து உதவி செய்தன. நாங்கள் அனைவரும் கண்ணீர் சிந்தியதோடு, உணவைச் சாப்பிட்டோம். திபெத் எருமைகளே எங்களது உயிரை காப்பாற்றின என்று வுயுச்சு கூறினார்.
அதற்குப் பின், திபெத் எருமை மீது அவர் ஆழ்ந்த உணர்ச்சியைக் கொண்டுள்ளார். 1992ஆம் ஆண்டு, பணிக் காரணமாக, அவர் பெய்ஜிங் திரும்பினார். ஆனால், அங்குள்ள மக்கள் மற்றும் திபெத் எருமையை மறக்க முடியாததால், ஆண்டுதோறும் அவர் பீடபூமிக்குத் திரும்பினார்.
அப்போது, திபெத் எருமை அருங்காட்சியகத்தைக் கட்டியமைக்கும் எண்ணம் அவருக்கு வந்தது. அதை நனவாக்க, அவர் அரசின் உயர் நிலைப் பதவியிலிருந்து விலகினார். திபெத் எருமைகள் திபெத் வரலாறு மற்றும் பண்பாட்டின் ஒரு முக்கிய சின்னமாகும். உள்ளூர் பண்பாட்டைப் பேணிக்காப்பதில் திபெத் எருமை அருங்காட்சியகம் முக்கிய பங்காற்றும் என்று அவர் நம்புகிறார்.
2010ஆம் ஆண்டு, பெய்ஜிங் மாநகராட்சி அரசிடம் இந்த எண்ணத்தை அதிகாரப்பூர்வமாக முன்வைத்தார்.
2011ஆம் ஆண்டு திபெத் விடுதலை பெற்ற 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாட்ட, சீன அரசு லாசா நகரில் பண்பாட்டு மற்றும் விளையாட்டு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. வுயுச்சுவின் இந்த முன்மொழிவைக் கேட்டறிந்து, திபெத் எருமை அருங்காட்சியத்தை இந்த பண்பாட்டு மற்றும் விளையாட்டு மையத்தின் ஒரு பகுதியாகக் கட்டியமைக்க சீன அரசு முடிவெடுத்துள்ளது.
வுயுச்சு திபெத்துக்கான பெய்ஜிங் உதவி தலைமையகத்தின் துணை தலைவராக அருங்காட்சியகத்தின் கட்டுமானத்துக்குத் தலைமை தாங்கினார். நான்கு ஆண்டுகாலத்தின் முயற்சியில், 2014ஆம் ஆண்டு மே 18ஆம் நாள் திபெத் எருமை அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.