• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிராமத்தை செழுமைப்படுத்தும் திபெத் இன வீரர் சினதிங்ச்சு
  2014-09-04 11:00:15  cri எழுத்தின் அளவு:  A A A   

சினத்திங்ச்சுயின் ஊர், பாலாகெச்சுங் பள்ளத்தாக்கு, ஆறு, பனி மலை, புல்வெளி, ஏரி, திபெத் பண்பாடு ஆகியவற்றை இணைக்கும் அழகான இடமாகும். அவரது ஊரை அதிகமானோருக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறார். தவிரவும், ஊரின் அழகான இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எனது ஊர் பழங்கால தோற்றத்தை நிலைநிறுத்த வேண்டும். பணம் சாம்பதிப்பது எளிதானது. இம்மலைக்குள் தங்க மற்றும் வெள்ள கனிமம் உள்ளது. ஆனால், கனிம அகழ்வு, இயற்கை சூழலைச் சீர்குலைக்கும். பாதுகாக்காக, சுற்றுலா மிக உகந்த தொழிலாகும். சாலைக் கட்டியமைத்திட, மரம், புல்வளி, ஆறு எல்லாம் குலைக்கப்படாது என்று அவர் கூறினார்.

சாலை கட்டுமானத்தை அறிவித்த போது, அனைவரும் இதை எதிர்த்தனர் என்று சினத்திங்ச்சு நினைவு கூர்ந்தார். ஆனால் இச்சாலை, கிராமவாசிகளை ஏழ்மையிலிருந்து செழுமைக்குக் கொண்டு வரும் என்று நம்புகிறார். 2004ஆம் ஆண்டு, சாலை போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. பாலாகெச்சுங் பள்ளத்தாக்கின் சுற்றுலா படிபடியாக வளர்ந்து வருகிறது. கிராமவசிகள் தொலைதூரமான மலையிலிருந்து மலையடிக்கு குடியமர்ந்துள்ளனர். புது வீடு, குடிநீர், மின்சாரம், சாலை போக்குவரத்து ஆகியவற்றின் மூலம், கிராமவாசிகள் நவீன வாழ்க்கையை வாழ துவங்கினர். முன்பு, நகர பகுதிக்குப் போகும் 3 நாட்கள் பயணம், தற்போது ஒன்றரை மணி நேரமாக குறைக்கப்பட்டது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040