• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிராமத்தை செழுமைப்படுத்தும் திபெத் இன வீரர் சினதிங்ச்சு
  2014-09-04 11:00:15  cri எழுத்தின் அளவு:  A A A   

82 வயதான பெய்மா, முன்பு பாலா கிராமத்தில் வாழ்ந்தார். தற்போது 1 இலட்சத்து 50 ஆயிரம் யுவானை செலவிட்டு மலையடியில் 3 மாடியுடைய புது வீட்டைக் கட்டியமைக்கச் செய்தார். சினத்திங்ச்சு 50 ஆயிரம் யுவான் இலவசமாக வழங்கினார். பெய்மா கூறியதாவது

 

முன்பு இயற்கை எய்தியவர்களை உடனடியாக மலையில் புதைக்கப்பட வேண்டும். ஆனால், இப்போது போக்குவரத்து திறக்கப்பட்ட பின், மரணமடைந்த பின் பௌத்த துறவினரை அழைத்து மந்திரம் ஓதலாம். மேலும் எனது முதியோர் காலத்தில் வருத்தம் வராது என்றார் அவர்.

சுற்றுலா தொழிலின் வளர்ச்சி, உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வினியோகிதுள்ளது. 30 வயதான கெசங் 2008ஆம் ஆண்டு முதல் சுற்றுலா வழிகாட்டியாக இங்கு வேலை செய்ய துவங்கினார். திங்களுக்கு 4000 யுவான் சம்பாதிக்கலாம். அவர் கூறியதாவது

சுற்றுலா தொழில் இல்லாமல் இருந்திருந்தால், நான் வெளியூரில் கல்வி முடிந்த பிறகு ஊருக்கு திரும்பி இருக்க மாட்டேன். ஏனெனில் கிராமத்தின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், தற்போது எல்லோரும் ஊருக்குத் திரும்பி வேலை செய்கின்றனர் என்று அவர் கூறினார்.

2013ஆம் ஆண்டு, சினத்திங்சு, சொந்த செலவில், கிராமத்தின் 14 பேர்களை அழைத்து இலவசமாக திபெத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தார். நுங்பு, அவர்களில் ஒருவர். திபெத் பயணம், அவரது வாழ்க்கைகாலத்திலான கனவை நனவாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040