• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மத நல்லிணக்கத்தை உணர்த்தும் "ஜுவாங்ஜோ"
  2015-10-09 16:45:53  cri எழுத்தின் அளவு:  A A A   

அரபு நாடுகளிலிருந்து கடல்வணிகம் புரிய ஜுவாங்ஜோ வந்த இஸ்லாமியர்கள் இங்கேயே தங்கி தங்களது வியாபாரத்தை வியாபித்தனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில், டங் ஆட்சி காலத்தில் அவர்கள் மிகுந்த கௌரவத்துடன் வழிநடத்தப்பட்டனர். அதனால், தற்போது பல மசூதிக்கள் ஜுவாங்ஜோவில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது மத நம்பிக்கையை எள்ளளவும் பிரச்னையின்றி ஆண்டுக்கணக்கில் கடைப்பிடித்து வருகின்றனர். சாட்சியாக, 1009ஆம் ஆண்டில் அரேபியர்கள் கட்டிய ஜிங்ஜிங் மசூதியைக் குறிப்பிடலாம். இந்த மசூதிக்கு பல நாடுகளின் தலைவர்களும் வந்து பிரார்தித்து சென்றுள்ளனர்.

தவிர, வியாபாரம் செய்து வந்த பல இஸ்லாமியர்களின் கல்லறை, அது குறித்த குறிப்புகள் என பல விபரங்கள் ஜுவாங்ஜோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பலர், இங்கேயே திருமணம் செய்து தங்களது தலைமுறையை ஆலமர விழுதுகளைப் போல பரப்பினர். அதனால், இந்நகரில் அதிக அளவிலான சீன முஸ்லீம் மக்களைக் காண முடியும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040