• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மத நல்லிணக்கத்தை உணர்த்தும் "ஜுவாங்ஜோ"
  2015-10-09 16:45:53  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரம்மா, விஷ்னு, சிவன்:படைக்கும் தொழில் பிரம்மனுடையது; காக்கும் தொழில் விஷ்னுவினுடையது; அழிக்கும் தொழில் சிவனுடையது என்ற ஹிந்துக்களின் நம்பிக்கை எப்படி ஜுவாங்ஜோ நகரில் விதைக்கப்பட்டிருக்க முடியும். அந்த முடிந்தது என்றால் அது வணிகத்தால் மட்டுமே. ஆம். அரபு நாடுகளைப் போல, ஜுவாங்ஜோவுக்கு இந்தியாவில் குறிப்பாக தெற்கு ஆசியாவில் இருந்து சென்றுள்ளனர்.

இஸ்லாமியர்களைப் போலவே, ஹிந்துக்களும் அவர்களுடையை நம்பிக்கையைத் தொடர டங் ஆட்சி காலத்தில் அனுமதிக்கப்பட்டது. சீனாவிலேயே ஜுவாங்ஜு நகரில் மட்டும்தான் ஹிந்துக்களின் கடவுகள் சிலையைக் காண முடியும். இங்கு, சிவா, விஷ்ணு, கிருஷ்ணா சிலைகள், கையுவான் புத்த கோவிலின் ஒரு பகுதியில் காண முடியும். 16 முகங்கள் கொண்ட 2 தூண்களின் 4 புறங்களிலும் ஹிந்துக்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.அவை, தமிழகத்தில் உள்ள சிலைகளை ஒத்த வடிவிலே இருக்கின்றன என்பதை ஜுவாங்ஜு கப்பலோட்டம் அருங்காட்சியகத்தில் அளிக்கப்பட்டுள்ள ஒப்பீட்டு பட விளக்கம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஜுவாங்ஜோவில் நடந்த அகழ்வாராய்ச்சியின்போது விஷ்ணு சிலைகள், சிதிலடமடைந்த கோவிலின் பகுதிகள் ஆகிய கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது எந்த ஹிந்து கோவிலும் இல்லை என்றாலும் ஹிந்து கடவுளை புத்த கடவுகளாகக் கருதி வழிபடும் கிராம் ஜுவாங்ஜுவில் அமைந்துள்ளது.

ஜுவாங்ஜோவுக்கு வந்த இந்தியர்கள் தமிழர்கள் என்பதற்கு, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஜுவாங்ஜோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் தெளிவாக இல்லை. ஆனால், அதில், "அரசே வணக்கம். தமிழர்களாகிய எங்களுக்கு வணிகம் புரிய அனுமதித்ததற்கு நன்றி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை சீன மொழியில் கூறப்பட்டுள்ளதன் மூலம் அறிய முடிகிறது.

ஜுவாங்ஜோ நகரின் வளர்ச்சிக்கு கடல்வழி வணிகம் வித்தாகியுள்ளது. 24 மணி நேரமும் ஜுவாங்ஜோ துறைமுகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பது நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.நகரின் சாலைகள், பெய்ஜிங் போன்ற பெரு நகரங்களைப் போன்று நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளன. நான்கு சக்கர வாகனங்களைவிட இரு சக்கர வாகனங்கள் மிக அதிகம். விண்ணைத் தொடும் தொழிற்சாலைகளோ, அதிக இறைச்சலை அளிக்கும் வாகனங்களோ அதிகம் இல்லை. ஆதலால் மக்கள் அமைதியான வாழ்வை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக உள்ளது.

சீனாவின் மிகப் பழமையான 4 இசைகளில் நன்யின் இசையை, ஜுவாங்ஜோவில் மிகச் சாதாரணமாகக் கேட்க முடியும். இரவு நேரங்களில் முதியோர்கள் கூடி, இளம் கலைஞர்களின் நன்யின் இசையைக் கேட்டு தங்களது இறுதிக் காலத்தை இனிமையாகக் கழித்து வருகின்றனர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040