• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லோதை தொன்மையான சிறுநகர்
  2016-05-19 15:19:10  cri எழுத்தின் அளவு:  A A A   

நண்பர்களே, வணக்கம், சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில் சீனாவின் ஸிச்சுவான் மாநிலத்தின் செங்டு நகர் பற்றி உங்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறேன். கேட்டு ரசிக்க நீங்கள் தயாரா?

நிகழ்ச்சியின் துவக்கத்தில், லோதை என்னும் செங்டு நகரின் தொன்மையான சிறுநகர் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இச்சிறுநகர் செங்டு நகரின் லோங்ஜுவேன்யீ வட்டத்தில் அமைந்துள்ளது. ஹக்கா சிறுநகர் அதுவாகும். அதனாலே, அங்குள்ள சிறப்பு மிக்க ஹாக்கா மக்கள், ஹாக்கா உணவுகள் மற்றும் ஹாக்கா பாணியுடைய கட்டிடங்களால், கடந்த சில ஆண்டுகளாக, லோதை சிறுநகர் அதிக பயணிகளை ஈர்த்து வருகிறது.

இந்தச் சிறுநகர், ஆறு மற்றும் மலையால் சூழப்பட்டுள்ளது. நீண்ட வரலாறுடைய இச்சிறுநகரில் ஹாக்கா மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். முன்பு, லோதை சிறுநகர் விசாலமான இடத்தைக் கொண்டிருந்தது. ஹாக்கா மக்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். அவர்களின் முயற்சியில், லோதை தலைகீழான மாற்றத்தைக் கண்டுள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040