• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லோதை தொன்மையான சிறுநகர்
  2016-05-19 15:19:10  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, லோதை சிறுநகரில் சுமார் 20ஆயிரத்துக்கும் அதிகமான குடிமக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 90 விழுக்காட்டு மக்கள் ஹாக்கா மக்களாவர். ஹாக்கா மொழி மற்றும் ஹாக்கா வழக்கப்பழக்கங்கள் அங்கு பரவலாக உள்ளன.

பழைய பாதை மையமாகிய லோதை luo dai சிறுநகர் பற்றி, பல புராணக்கதைகளும் பல பழைய கட்டிடங்களும் நிறைந்துள்ளன. ஜிங் வம்சக்காலத்தைச் சேர்ந்த கட்டிடங்கள் நன்றாகப் பேணிக்காக்கப்படுகின்றன.

மிங் மற்றும் ஜிங் வம்சக்காலத்தில், சீனாவின் குவாங்துங், ஹூகுவாங், ஜியாங்சி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஹாக்கா மக்கள் லோதை சிறுநகருக்குக் குடியேறினர். அவர்கள் தங்களது பாரம்பரியம், மொழி, வழக்கப்பழக்கங்களைத் தலைமுறைத் தலைமுறையாகப் பேணிக்காத்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, ஒரே ஊரிலிருந்து வந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவையும் உதவியையும் அளிக்கும் வகையில், அவர்கள் ஹூவேகுவான் என்ற சிறப்பு மண்டபத்தை நிறுவப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மண்டபம் முக்கியத்துவம் மிகுந்தது. இன்றும் கூட, குவாங்துங், ஹூகுவாங் உள்ளிட்ட சிறப்பு மண்டபங்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. குடியேறியவர்களுக்கிடையே உள்ள பொறுமைத் தன்மையையும் சுதந்திரத்தையும் இந்தச் சிறப்பு மண்டபங்கள் வெளிக்காட்டுகின்றன. குடியேறிய இனத்தவர்களின் வெவ்வேறு பாரம்பரிய கட்டிடங்களையும் வெளிக்காட்டுகின்றன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040