• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லோதை தொன்மையான சிறுநகர்
  2016-05-19 15:19:10  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும், லோதை சிறுநகரில் யுதை yudai ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி ஆண்டு முழுவதும் பூக்களாலும் பழங்களாலும் அலங்கரிக்கப்படும். அங்குள்ள சுற்றுச்சூழல் மிகவும் அமைதியானதும் அழகானதுமாகும். படகில் ஏரி அழகைக் கண்டுரசித்து, மனத்தைத் தளர்த்த யுதை ஏரி சிறந்த தேர்வாகும்.

தீ டிராகன் நடனம் உங்களுக்கு ஞாபகத்தில் இன்னும் இருக்கிறதா?லோதை சிறுநகரில் நீர் டிராகன் நடனம் மிகவும் புகழ் பெற்றது. இச்சிறப்பு நடனம் 300க்கும் அதிகமான ஆண்டுகள் சரித்திரம் உடையது. வறட்சி இருந்த போது, மழை வேண்டி ஆடும் நடனம் அதுவாகும். நீர் டிராகன் நடனத்தின் போது, பார்வையாளர்கள் டிராகன் மீது நீர் ஊற்றுவர். ஹாக்கா மக்களின் கருத்தில், நீர் செல்வமாகும். அதனாலே, டிராகன் எவ்வளவு ஈரமாகிறதோ. மக்களுக்கு அவ்வளவு செல்வம் வரும் என்பது நம்பிக்கை. தற்போது, இந்த நீர் டிராகன் நடனம் ஹாக்கா பண்பாட்டில் ஈர்ப்பாற்றல் மிக்க அம்சங்களில் ஒன்றாகும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040