• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லோதை தொன்மையான சிறுநகர்
  2016-05-19 15:19:10  cri எழுத்தின் அளவு:  A A A   

அங்குள்ள சிறப்பு மண்டபத்தைத் தவிர, ஹாக்கா அருங்காட்சியகம் மற்றும் ஹாக்கா பூங்காவைப் பார்வையிடத் தவறாதீர்கள். நீங்கள் அங்குள்ள சிறப்புப் பண்பாட்டை அறிந்து கொள்வதற்கு உறுதுணையாக அது இருக்கும்.

ரேதங்ஸி கோயில் லோதை luo dai சிறுநகரில் புகழ் பெற்ற காட்சித்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் 1400 ஆண்டுகள் வரலாறுடையது. கோயிலின் பெயரான ரேதங் சீன மொழியில் விளக்கு என்ற பொருளைத் தருகிறது. உடம்பில் 108 அக்கு பங்சர் மருத்துவப் புள்ளிகள் உள்ளன என்று சீனாவில் கருதப்பட்டுள்ளது. ஜிங் வம்சக்காலத்தில், கோயிலில் ஒரு சிறப்பு விளக்கு புத்தர் சிற்பம் இருந்தது. அதன் உடம்பிலுள்ள 108 அக்கு பங்சர் மருத்துவப் புள்ளிகளில் விளக்கு வைக்கக் கூடிய குகைகள் உள்ளன. உடம்பின் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்பட்டிருந்தால், புத்தர் சிற்பத்தில் அதே பகுதியில் ஒரு விளக்கை ஏற்றிக் குணமடைய பிரார்த்திக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதனால், இக்கோயிலுக்கு ரேதங்ஸி கோயில் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரேதங்ஸி கோயில் சீனாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் புகழ் பெற்றது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040