• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லோதை தொன்மையான சிறுநகர்
  2016-05-19 15:19:10  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாக்கா பாணியுடைய காட்சித்தலங்களைத் தவிர, அங்கு சுவையான உணவுகளும் அதிகம். Shang xin liang fen எனும் ஒரு வகை நூடுல்ஸ் அவற்றில் ஒன்றாகும். இது உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். இது ரொம்ப காரமானது. அதனால், இதைச் சாப்பிடும் போது, சிலர் வருத்தமடைந்ததைப் போலக் கண்ணீர் சிந்துவர். அதனாலே, இந்த நூடுல்ஸ் பெயர், தமிழில் சொன்னால், வருத்தமடைய வைக்கும் நூடுல்ஸ் என சொல்லலாம்.

Tian e dan அன்னப் பறவை முட்டை என்பது அங்குள்ள மற்றொரு சிறப்பு இனிப்பாகும். மாவால் சமைக்கப்பட்ட இந்த இனிப்பு, அன்னப்பறவையின் முட்டைப் போல இருக்கும்.

மேலும், ஹாக்கா மக்களுக்குத் தேநீர் மிகவும் பிடிக்கும். அங்குள்ள அமைதியான தேனீரகத்தில் நண்பர்களுடன் இணைந்து ஒரு கோப்பை தேனீரை அருந்துவது கட்டாயமானது.

எப்படி, லோதை சிறுநகரில் பயணம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? சரி, நண்பர்களே, இத்துடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி பற்றி ஏதேனும் கருத்துக்கள் அல்லது முன்மொழிவுகள் இருந்தால், எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் பதிலை நான் எப்போதும் மதித்து வரவேற்கிறேன்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040