• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிங்லே எனும் சிறுநகர்
  2016-06-01 16:23:25  cri எழுத்தின் அளவு:  A A A   

செங்டு நகரில், பிங்லே எனும் சிறுநகர் பற்றி கூறுகிறோம். இந்தச் சிறுநகர் செங்டு நகரின் தென் மேற்கிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கி.மு 150ஆம் ஆண்டுக்கு முன்பே, அது உருவாகியது. அந்நகர் ஈராயிரத்துக்கும் மேலான ஆண்டு வரலாறுடையது.

அங்கு, மூங்கில் மரங்கள் அங்கு அதிகம். அதுமட்டுமல்ல, சுங் வம்ச காலத்தில் பிங்லே சிறுநகர் புகழ் பெற்ற தாள் உற்பத்தி ஊராகும்.

பிங்லே சிறுநகர் நான்கு திசைகளிலும் மலையால் சூழப்பட்டுள்ளது. பைமோ எனும் ஆறு சிறுநகரைக் கடந்து ஓடுகிறது. 70 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய இச்சிறுநகரில், மிங் மற்றும் ஜிங் வம்சத்தைச் சேர்ந்த பழைய கட்டிடங்களின் நிலப்பரப்பு சுமார் 235400 சதுர மீட்டராகும். அவற்றில் பெரும்பான்மையான கட்டிடங்கள் நன்றாக பேணிக்காக்கப்பட்டு வருகின்றன.

இச்சிறுநகர் மித வெட்ப மண்டலத்தைச் சேர்ந்த பகுதியாகும். ஆண்டுக்கு சராசரி தட்ப வெப்பம் 16 டிகிரி செல்சியஸ். மழை பொழிவு நன்றாக உள்ளது. அதனால், நிலத்தடியில் நீர்வளம் நிறைந்துள்ளது. தற்போதுள்ள பிங்லே சிறுநகரில், பழைய வீதி, கோயில், மரம், பழைய பண்பாடு முதலியவற்றைக் கண்டுரசிக்கலாம். அங்கு மரத்தின் கீழ் அமர்ந்து வரலாற்றின் மாற்றங்களை உணரலாம்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040