• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிங்லே எனும் சிறுநகர்
  2016-06-01 16:23:25  cri எழுத்தின் அளவு:  A A A   

இரண்டாவது காட்சித்தலம், ஜின்ஹூவா மலையாகும். இக்காட்சித்தலம், பிங்லே சிறுநகரின் தென்கிழக்கிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாங் வம்ச காலத்தில், அங்குள்ள ஜின்ஹூவா புத்தர் மற்றும் தியேகுவுங் கோயில் மிகவும் புகழ் பெற்றது. அழகு மிக்க இயற்கை காட்சியும் மானிடப் பண்பாட்டியல் நிறைய செயற்கைக் காட்சியும் அங்கு செறிந்து காணப்படுகின்றன.

மூன்றாவது ஹூவாஜியூஷேன் காட்சித்தலமாகும். பிங்லேயிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது. பரந்து பட்ட மூங்கில் காடு உங்களின் மனத்துக்கு அமைதியைக் கொண்டு வரும். ஜிங் வம்சகாலத்தைச் சேர்ந்த கட்டிடங்கள் இன்றும் கூட, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய தோற்றத்தை தக்க வைத்துள்ளது. ரம்மியமானது. அவற்றில், முந்தைய மன்னரின் பாராட்டைப் பெற்ற லீ குடும்பத்தின் கட்டிடம் பிரதிநிதித்துவம் வாய்ந்தது. மேலும், உள்ளூர் மக்களின் கட்டிடங்களும் மூங்கில் காட்டில் கம்பீரமாக நிற்கின்றன. உள்ளூர் விவசாயி வயலில் சுறுசுறுப்பாக உழைக்கும் காட்சிகளையும் நீங்கள் கண்டுரசிக்கலாம். நகர வாழ்வால் சோர்வடைந்தவர் மனத்தை முழுமையாகத் தளர்த்த ஏதுவான தலைசிறந்த இடம் ஹூவாஜியூஷேன் காட்சித்தலமாகும்.

நான்காவது, ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடைய பழைய பாதை ஜின்ஹேன் பாதையின் சிதிலம். முன்பு, செங்டு நகர், திபெத் மற்றும் யுன்னான் உள்ளிட்ட சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களை ஒன்றிணைத்த பாதை அதுவாகும். தென் சீனாவிலுள்ள பட்டுப் பாதை என அது பாராட்டப்படுகிறது. காட்டிலுள்ள இந்தப் பழைய பாதையின் சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளமுடைய பகுதி இன்னும் முழுமையாகப் பேணிக்காக்கப்பட்டுள்ளது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040