• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிங்லே எனும் சிறுநகர்
  2016-06-01 16:23:25  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும், பிங்லே சிறுநகரில் மூங்கிலால் பின்னப்பட்ட கலைப் பொருட்கள் அதிகம். அவை தலைமுடி போன்ற மெலிந்த மூங்கில் நூலால் தயாரிக்கப்பட்டவை. அதன் தயாரிப்பு மிகவும் நேர்த்தியானது. மூங்கிலிலான நகைப் பெட்டி, பூ ஜாடி, தேநீர் கோப்பை முதலியவை அங்குள்ள சிறப்புப் பொருட்களாகும். நண்பர்களுக்கு நினைவுப் பரிசாக அளிக்க அவற்றை வாங்கலாம்.

பிங்லே சிறுநகரில் பாரம்பரிய தங்கும் விடுதிகள் அதிகம். இணையத்தில் முன்பதிவு செய்யலாம். சுற்றுச்சூழல் மிகவும் நல்லது. விலை அதிகமல்ல.

எப்படி, நண்பர்களே, பிங்லே சிறுநகர் உங்களுக்குப் பிடித்திருந்ததா? ஒவ்வொருவரின் மனத்திலும் ஒவ்வொரு  பிங்லே சிறுநகர் இருக்கும் என்று நான் நம்புகிறேன். சரி, நண்பர்களே, இத்துடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி பற்றி ஏதேனும் கருத்துக்கள் அல்லது முன்மொழிவுகள் இருந்தால், எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் பதிலை நான் எப்போதும் மதித்து வரவேற்கிறேன்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040