• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அருவியின் உலகமான ஜியுசைகோ காட்சித்தலம்
  2016-06-28 09:20:37  cri எழுத்தின் அளவு:  A A A   

அதுமட்டுமல்ல, அருவியின் உலகமாகவும் ஜியுசைகோ காட்சித்தலம் திகழ்கிறது. அனைத்து அருவிகளும் செழித்து வளர்ந்து வரும் காட்டிலிருந்து பிறக்கின்றன. அங்கு சீனாவிலே மிக அகலமான அருவியைக் காணலாம். அது ஒரு பெரிய ஓவியம் போல் காட்சி அளிக்கும். டிராகன் போன்று உயரத்திலிருந்து வீழ்ந்து தவழ்ந்து வருகிறது. சூரியக் கதிர்பட்டால், சவானவில் பாலம் போலத் தோன்றும்.

வண்ணமயமான காடுகள் ஜியுசைகோ காட்சித்தலத்தின் புகழ் பெற்ற காட்சிகளில் ஒன்றாகும். 2000க்கும் அதிகமான தாவரங்கள் அங்கு செழித்து வளர்கின்றன. பருவக்காலத்தின் மாற்றத்திற்கு இணங்க, பல நிறங்களில் தோற்றமளிக்கும் காடுகளைப் பார்ப்பதற்கு சொர்க்கம் போல உணர்வு ஏற்படும்.

ஜியுசைகோ காட்சித்தலத்தில் மலைகள் வானைத் தொடு விதம் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன. குளிர்காலத்தின் போது, பனியுலகமாக மாறும். மேகங்கள், எண்ணற்ற நட்சத்திரங்கள், தொலைவிலுள்ள மலைகள் முதலியவற்றை மலை உச்சியிலிருந்து கண்டுரசிக்காலம்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040